என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » indias
நீங்கள் தேடியது "Indias"
பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். #PulwamaAttack #IndiaIsolatesPakistan #PakForeignMinister
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுகூலமான நாடு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியா, அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்த திட்டம் நிறைவேறாது என பாகிஸ்தான் கூறி உள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரேசி பேசியதாவது:-
மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ, அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதேவேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது.
இவ்வாறு அவர் பேசினார். #PulwamaAttack #IndiaIsolatesPakistan #PakForeignMinister

வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வர உள்ளனர். மார்ச் 23ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது பங்கேற்க இருக்கிறார். அதேபோல், ஜெர்மன் மந்திரி ஹீகோ மாஸ் மார்ச் 12 ஆம் தேதி பாகிஸ்தான் வர உள்ளார். ஐரோப்பிய யூனியனின் உயர் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார். எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவது இல்லை.
மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ, அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதேவேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது.
இவ்வாறு அவர் பேசினார். #PulwamaAttack #IndiaIsolatesPakistan #PakForeignMinister
×

X