என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » indra nooyi
நீங்கள் தேடியது "Indra Nooyi"
உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். #IvankaTrump #IndraNooyi
நியூயார்க்:
உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். அவர் தனியார் உள்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பதவிக்கு தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இந்திரா நூயி (வயது 63) பெயர் அடிபடுகிறது. இவர், குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’யின் தலைமை செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலகினார்.
இவரது பெயரை உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்த தகவல்களை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டுவிட்டரில் இவான்கா டிரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், இந்திரா நூயியை ‘வழிகாட்டி, உத்வேகம் தருபவர்’ என குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி இவான்கா டிரம்ப், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீபன் மனுசின், வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தற்காலிக தலைவர் மிக் முல்வானி ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருவதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது. #IvankaTrump #IndraNooyi

12 ஆண்டுகளாக பெப்சி குழும நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Pepsi #IndraNooyi
நியூயார்க்:
உலகம் முழுவதும் குளிர்பான சந்தையில் கொடி கட்டி பறக்கும் பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைவராக உள்ள லாகுவார்டா புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாகுவார்டா வரும் அக்டோபர் மாதம் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
கடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, அடுத்தாண்டு வரை தலைவர் பொறுப்பில் தொடருவார் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த இந்திரா நூயி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டு போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015-ம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
×

X