search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infinix S4"

    32 எம்.பி. செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இன்ஃபினிக்ஸ் எஸ்4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 32 எம்.பி. செல்ஃபி கேமரா இருக்கிறது.

    மற்றசிறப்பம்சங்களை பொருத்தவரை 6.21 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் X ஓ.எஸ். 5.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள், ஏ.ஐ. போர்டிரெயிட்கள், குவாட் பேயர் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா 8 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை எடுக்க வழி செய்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 2.5D கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் எஸ்4 சிறப்பம்சங்கள்

    - 6.21 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
    - 650MHz IMG PowerVR GE8320 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் XOS 5.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12µm பிக்சல்
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2, 6P லென்ஸ், 2 எம்.பி. கேமரா
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8″ சாம்சங் S5KGD1 சென்சார், f/2.0, 0.8um பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் நெபுளா புளு, டுவிலைட் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 28 ஆம் தேதி துவங்குகிறது.
    ×