search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iniya"

    • இதுவரை நூற்றிருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்,
    • கடந்த ஆண்டு இவரது 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இதுவரை நூற்றிருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தின் மூலம் சரத் குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    அடுத்தடுது போலீஸ் கதாப்பாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    கடந்த ஆண்டு இவரது 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார். இப்படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். தற்கு முன் மெமரீஸ் என்ற திரைப்படத்தை இயக்கியவராவார்.

    சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோய்க்கு பாதிக்கப்பட்ட ஒரு ரிடையர்ட் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது நியாபகம் அழிவதற்க்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும் இதை மையமாக படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

    சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர். சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துரை கே முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீரன்’.
    • இந்த படத்தில் ஜேம்ஸ் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் எம். ராஜேஷின் உதவி இயக்குனரான துரை கே முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சீரன்'. ஜேம்ஸ் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சோனியா அகர்வால், இனியா, ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    Netco Studios சார்பில் ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் நியாஸ் தயாரிப்பில்  சமூக அக்கறை கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள 'சீரன்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகை இனியா பேசியதாவது, இந்தப் படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எடை கூட்டிக் குறைத்து நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் படத்தில் பாடல் காட்சிகளில் நடிக்கும் போது சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.


    நான் இவரைப் பார்த்து சில தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ள உள்ளேன். இயக்குனர் மிகவும் பக்குவம் நிறைந்தவர், அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். பல பிரச்சனை நடந்தாலும் எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார். அதே போல ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்று பேசினார்.

    • சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா.
    • இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார்.

    சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய மெகாத்தொடர் இனியா. சன் டிவியில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.


    இனியா

    இந்த தொடரில் கதையின் நாயகியான இனியா சுட்டிப் பெண். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள். ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா.

    ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தவறையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன். எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும், யார் யாரை வெல்லப் போகிறார்கள், என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள மெகாத்தொடர் இனியா.


    இனியா

    இந்த தொடரில் இனியாவாக ஆலியா மானசா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளார். சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி, விக்ரமாக நடிக்கிறார். மேலும், சந்தான பாரதி, பிரவினா, எல்.ராஜா, மான்ஸி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இனியா தொடரில் சரிகம நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளராக இருக்கும் பி.ஆர். விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குனர் எல். ராஜா, தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்திய ஆகிய ஐந்து இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    வாகை சூடவா படம் மூலம் பிரபலமான நடிகை இனியா, தமிழில் வலுவாக கால் பதிக்க புதிய படம் ஒன்று காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். #Iniya #Coffee
    வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா. அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் இனியாவின் வேடம் பலரால் பாராட்டப்பட்டது.

    தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்.

    தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன். அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும். தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும். ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது. 

    மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் "தாக்கோல்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பேமிலி சப்ஜெக்ட். கோவா கேரளாவில் ஷூட்டிங் நடக்குது.



    இன்னொரு சந்தோஷம் என்னன்னா... கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரோட "துரோணா" என்ற படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன். கல்வியை மையப்படுத்தி உருவாகிற சப்ஜெக்ட். எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும். 

    தமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி. அது காபி படத்தின் மூலம் சரியாயிடும். மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச "பரோல்" என்ற படத்துக்காகவும் "பெண்களில்லா" என்ற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு.

    2018 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்தது... 2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன் என்றார் இனியா.
    பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இனியா, தற்போது சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் படத்தில் நடித்து வருகிறார். #Iniya #Coffee
    ‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.

    ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது, சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை.



    நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை இத்திரைப்படம் தோலுரித்து காட்டியிருக்கும் விதம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்க இருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



    வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுகொள்ள, மோகன் ராஜா பாடல்களை எழுத, வெங்கட்நாத் இசை அமைத்திருக்கிறார். வெகு நேர்த்தியாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
    தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள். 

    அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.



    கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

    அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange

    தமிழ், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இனியா, இனி தான் குத்துப் பாடல்களுக்கு ஆடக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக கூறினார். #Iniya
    ‘வாகை சூட வா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. தற்போது தமிழில் `காபி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இனியாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகளும் இருக்கின்றது.

    அவர் அளித்துள்ள பேட்டியில், நான்கு பாடல்களுக்கு டான்ஸ் ஆடிவிட்டு, ஹீரோவை காதலிக்கும் நடிகையாகவே இருந்து விடாமல் மக்கள் மனதில் பதிவது மாதிரி விதவிதமான கேரக்டர்களில் நடிக்கணும்’ என்றார்.



    அவரிடம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் `குக்குறு’ பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு ``டைரக்டரின் விருப்பத்தின் பேரில் அந்தப் பாடலுக்கு ஒப்புக் கொண்டேன். நல்ல கலர்புல்லான சூழ்நிலையில் அமைந்திருக்கும் அந்த பாடல். பிருந்தா மாஸ்டர்தான் அந்த பாடலுக்கு கோரியோகிராப் பண்ணியிருந்தாங்க. அதற்குப் பிறகு, நான் எந்தக் குத்துப்பாடலுக்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இனியும் அப்படிக் குத்துப் பாடல்களுக்கு ஆடக் கூடாது எனவும் முடிவெடுத்துவிட்டேன்’’ என்று கூறினார். #Iniya

    `மயங்கினேன் தயங்கினேன்' படத்தை இயக்கிய எஸ்.டி.வேந்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தில் நடிகர் சரத்குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். #VelacheryThuppakiSoodu #SarathKumar
    வடமாநில இளைஞர்களின் அட்டகாசத்தை வெளிக்கொண்டு வரும் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'

    வி.ஆர்.மூவிஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'. எஸ்.டி.வேந்தன் இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஷாம் - சினேகா நடித்த `இன்பா' மற்றும் `மயங்கினேன் தயங்கினேன்' ஆகிய படங்களை இயக்கியவர். 

    இந்த படத்தில் நடிகர் சரத்குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக, மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை பணிகளை கவனிக்கிறார். இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.

    தற்போதைய காலகட்டத்தைப் பொறுத்தவரை வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது. 

    இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என பெயரிட்டுள்ளனர்.

     

    இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால், இந்தப்படத்திற்கு `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

    படம் குறித்து இயக்குநர் S.T..வேந்தன் கூறும்போது, "காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை. யாரும் போராடுவதில்லை. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. 

    ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும்  என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.

    இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்" என்றார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #VelacheryThuppakiSoodu #SarathKumar

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான இனியா, தான் நடித்துள்ள இசை ஆல்பத்தின் மூலம் புற்றுநோயாளிகளுக்கு உதவ திட்டமிட்டிருக்கிறார். #Mia #Iniya
    ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இனியா நடிப்பில் அடுத்ததாக பொட்டு படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், இசை ஆல்பம் ஒன்றை வெளியிடவிருக்கிறார். ’பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு பெண்ணை பற்றிய பாடல் இது. விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும். இது தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். 

    அந்த லட்சியத்தை அடைய போராடுகிறாள். அவளுக்கு பல தடைகள் வருகின்றன. ஆனால் லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போராடுகிறாள். அவள் வென்றாளா? இல்லையா? என்பதே இந்த மியா ஆல்பம்’ என்கிறார் இனியா.



    இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் புற்றுநோயால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்.

    சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார். அபிரஜிலால் - ஜெயன் இணைந்து இணை அமைத்துள்ளனர். அருண் நந்தகுமார் நடன காட்சிகளை அமைத்து இருக்கிறார். #Mia #Iniya

    தமிழ், மலையாள மொழிகளில் பிரபல நாயகியான இனியாவின் தங்கை தாரா, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். #Thara
    ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. 

    முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியிருக்கும் இந்த படத்தை ரசாக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா நாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். 

    கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.



    இந்த படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில், “ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம். இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான். படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.” என்று கூறினார்.

    மேலும், “தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.” என்று அக்கா இனியா அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தார். #Kilambitaangayaa Kilambitaangayaa #Thara
    ×