என் மலர்
நீங்கள் தேடியது "Insta Post"
- இளவரசி விவாகரத்து செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.
துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
விவாகரத்து குறித்து ஷைக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில், "அன்புள்ள கணவரே.. உங்களுக்கு வேறொரு துணை கிடைத்துவிட்டதால், நம் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.
"இது ஒரு மோசமான செய்தி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று ஒரு பயனர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "உங்களின் முடிவுக்காக பெருமைப்படுகிறேன்" என்றார்.
இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர், 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் மகளை வரவேற்றனர்.
ஷைக்கா மஹ்ரா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர் மற்றும் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரின் மகள் ஆவார்.
அவர் பெண்கள் அதிகாரம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்காக வாதிடுபவர். அவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் பெற்றுள்ளார்.
- தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம்.
- நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர்.
'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிடவுள்ளது.
இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே வாழு வாழவிடு என்று தனுஷ் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில், "வாழு வாழவிடு. இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி டை ஹார்ட் ரசிகர்களுக்காகவாவது.. மக்கள் மாறுவதற்கும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண்பதற்கும் நான் கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனுஷ் தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தனுஷ் முன்பு பேசியிருந்த வீடியோ மற்றும் அதன் பதிவை நீக்கம் செய்துள்ளார்.