என் மலர்
நீங்கள் தேடியது "IPL 2018"
இந்த வெற்றி தலைமை பயிற்சியாளரான ஸ்டீவன் பிளமிங்கிற்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் பிளமிங் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், மிகவும் உயர்ந்த நிலையில் வெற்றியை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இரண்டு ஆண்டுகள் தடைபெற்று மீண்டும் அணிக்கு திரும்பும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உணர்வு வீரர்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். இரண்டு ஆண்டுகள் என்பது அணிக்கு மிகவும் கடினமானது. இதில் சந்தேகம் ஏதும் இல்லை. மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி பிறகு, போட்டிகளில் கடும் சவாலாக இருக்க வேண்டும், அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது’’ என்றார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மா சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். சிறப்பாக விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்று 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வீரர்கள் அனைவரும் கொண்டாடினர்.

வெற்றி குறித்து டுவிட் செய்த ஹர்பஜன் சிங், 'தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 'கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம். வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்'
என தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK






மும்பை:
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கோப்பை யாருக்கு?
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் உள்ளன. சென்னை அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும் , ஐதராபாத் 2016-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.
சென்னை அணியின் பேட்டிங்கும், ஐதராபாத் அணியின் பந்துவீச்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். சென்னை அணியின் பலமே பேட்டிங் தான். கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முத்திரை பதிக்க கூடிய வர்கள்.
சென்னை அணியில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் நிகிடி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ்பாண்டே, யூசுப்பதான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணியிலும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), வாட்சன், டுபெலிசிஸ், ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் அல்லது கரண் சர்மா, ஷர்துல் தாகூர், நிகிடி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), விர்த்திமான் சஹா, ஷிகர் தவான், சகீப்-அல்-ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான், பிரத்வெயிட், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், சந்தீப் சர்மா அல்லது கலீல் அகமது அல்லது பாசில் தம்பி.
10 பந்தில் 34 ரன்கள் குவித்த ரஷித் கான், 3 விக்கெட், 3 கேட்ச் மற்றும் ஒரு ரன்அவுட் செய்ய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். ரஷித் கானின் ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை குறித்து பாராட்டி டுவிட் செய்திருந்ததார்.

ஏராளமான ரசிகர்கள் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கி, இந்தியாவிற்காக விளைாட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘‘நான் அனைத்து டுவிட்டர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். குடியுரிமை சம்பந்தான நடைமுறைகளை உள்துறை அமைச்சகம்தான் பார்த்து வருகிறது’’ என்று டுவிட் செய்திருந்தார். பின்னர் இந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.
இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.


ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
இவ்வாறு டோனி கூறினார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni








அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் இதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ரன் ஏற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது. சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்னைத் தொட்டது. கடைச ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.
5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. தவான், 2. கேன் வில்லியம்சன், 3. ஷாகிப் அல் ஹசன், 4. யூசுப் பதான், 5. தீபக் ஹூடா, 6. சகா, 7. பிராத்வைட், 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. சித்தார்த் கவுல், 11. கலீல் அஹமது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சுனில் நரைன், 2. கிறிஸ் லின், 3. ராபின் உத்தப்பா, 4. நிதிஷ் ராணா, 5. தினேஷ் கார்த்திக், 6. ஷுப்மான் கில், 7. அந்த்ரே ரஸல், 8. பியூஸ் சாவ்லா, 9. குல்தீப் யாதவ், 10. பிரசித் கிருஷ்ணா, 11. ஷிவம் மவி.