search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPod"

    • ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர்.
    • ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் தொழில்நுட்ப துறையை திரும்பி பார்க்க செய்திருக்கின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபாட் மாடல் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் மாடல் திறக்கப்படாத நிலையில் ஏலத்திற்கு விற்பனைக்கு வந்தது.

    இதனை ரேலி என்ற நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. ஏலத்தில் பங்கேற்றவர் திறக்கப்படாத நிலையில் இருந்த ஒரிஜினல் ஐபாட் மாடலை 29 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறார். ரேலி என்ற தளம் பயனர்கள் மதிப்பு மிக்க பொருட்களை வாங்க வழி செய்கிறது. 2021-ம் ஆண்டு இந்த ஐபாட் மாடல் 5 ஆயிரம் பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒரு பங்கின் விலை 5 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

     

    தற்போது இந்த ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். இத்தனை விலை கொடுத்து ஒரிஜினல் ஐபாட் மாடலை யார் ஏலத்தில் வாங்கினார்கள் என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது இந்த ஐபாட் மாடல் போர்டபில் மியூசிக் பிளேயர்கள் பிரிவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

    ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார். மெல்லிய டிசைன், பல்வேறு புதுமை மிக்க அம்சங்கள் (அன்றைய தேதிக்கு) உள்ளிட்டவை இசை பிரியர்களை பெரிதும் கவர்ந்தது. அன்று இதன் விலை 399 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதும், அதிகம் பேர் வாங்கியதால் பிரபலமான சாதனமாக இது மாறியது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய பிராசஸருடன் 2019 ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை ஐபாட் ஆகும். 

    2019 ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய ஐபாட் மாடலில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்பட்டுள்ளது. இதே பிராசஸர் ஐபோன் 7 மாடலில் வழங்கப்பட்டது.

    புதிய ஐபாட் டச் மாடலில் பழைய பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதில் முந்தைய மாடலில் இல்லாத பல்வேறு அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் உள்ளிட்டவை முதல்முறையாக ஐபாட் டச் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 



    புதிய பிராசஸர், 256 ஜி.பி. மெமரி தவிர 2019 ஐபாட் மாடலின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 4-இன்ச் டிஸ்ப்ளே, ஹோம் பட்டன், கேமராக்கள் உள்ளிட்டவை முந்தைய மாடல்களில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபாட் மாடலில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய தலைமுறை ஐபாட் டச் மாடலில் கேமிங் அனுபவம் சீராக இருக்கும் என்றும், காட்சிகள் மிகவும் அழகாக தெரியும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவற்றில் ஏ.ஆர். அனுபவங்கள் பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஐபாட் டச் மாடல் ஸ்பேஸ் கிரே, வைட், கோல்டு, புளு, பின்க் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 32 ஜி.பி. மாடல் விலை ரூ.18,900, 128 ஜி.பி. மாடல் ரூ.28,900 என்றும் 256 ஜி.பி. மாடல் விலை ரூ.38,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெறுகிறது.
    ×