search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iran leader"

    • வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உயர் [தேசிய-மத] தலைவராக (Supreme Leader) ருஹோல்லா கோமேனி பதவி வகித்தார்.1989 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின் தேசிய தலைவரான அயத்துல்லா அலி காமேனி [85 வயது] இன்று வரை அந்த பதவியில் இருக்கிறார்.

     

    ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியும் ஆகும். இந்நிலையில் தற்போது இஸ்ரேலுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அடுத்த ஈரான் தேசிய தலைவராகத் தனது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி அயத்துல்லா காமேனியின் அவசர அழைப்பின்படி ஈரான் நிபுணர்கள் சபை [Assembly of Experts] -இல் அங்கம் வகிக்கும் 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    இந்த வாக்கெடுப்பில் ருஹோல்லா கோமேனியை அடுத்த தலைவராக ஏற்கும் முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறையில் இல்லாமல் அடுத்த தலைவர் தேர்வு நடப்பது வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சி மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் போராட்டம் வெடிக்கும் என்று அஞ்சுவதால் இந்த தலைவர் தேர்வு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அலி  காமேனி பதவி விலகி மொஜிதாபாவிடம் அதிகாரம் கைமாறும் என்று கூறப்படுகிறது.  

     

    கடந்த இரண்டு வருடங்களாக மொஜிதாபா காமேனிக்கு இந்த தலைமை பொறுப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது ஈரான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் மொஜிதாபா ஏற்கனவே செயல்பட்டு வருகிறார்.

    ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போராட்டங்களை ஒடுக்கியவர் மொஜ்தபா. எனவே  அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    • ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
    • அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

    போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

    சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

    "ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஈரான் தலைவர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #MichaelWhite
    தெக்ரான்:

    அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரர் மைக்கேல் ஒயிட் (வயது 46). இவர் அமெரிக்க கடற்படையில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் ஈரானை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.

    ‘ஆன்லைன்’ மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். எனவே அந்த பெண்ணை பார்க்க கடந்த ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. அவர் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் ஈரானில் மஷாத் என்ற நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இவர் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. இதில் மைக்கேல் ஒயிட்டுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தகவலை ஒயிட்டின் வக்கீல் மார்க் சயித் தெரிவித்துள்ளார். #MichaelWhite
    ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை தடுப்போம் என்று கூறிய ஈரான் அதிபருக்கு ஆதரவு பெருகியுள்ளது. #Gulfoilexports
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

    இதற்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, ’ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்காசிய துணைகண்டத்தில் உள்ள இதர 15 நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை ஈரான் தடுத்து நிறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். 

    மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணை கப்பல்கள் செல்லும் ஹோர்முஸ் ஜலச்சந்தியை மறித்து, தடை செய்யப்போவதாக முன்னர் ஈரான் அரசு தெரிவித்திருந்தது.

    ரவுகானியின் இந்த கருத்துக்கு ஈரான் நாட்டின் மூத்த மதத்தலைவரான அயாத்துல்லா அலி கமேனி ஆதரவு தெரிவித்துள்ளார். அதிபர் ஹஸன் ரவுகானியின் இந்த கருத்தை ஈரான் அரசின் அணுகுமுறைக்கு சிறந்த முன்னுதாராணமாக கருத வேண்டும் என கமேனி குறிப்பிட்டுள்ளார். #Gulfoilexports  
    ×