என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISL"

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே சிட்டி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    டெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    டெல்லியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியின் இறுதியில் டெல்லி அணியின் ராணா கராமி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் டெல்லி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதன் தொடர்ச்சியாக, ஆட்டத்தின் இறுதியில், புனே அணியின் டிகோ கார்லஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம்  1-1 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி தனது முதல் லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது. #ISL2018 #JamshedpurFC #MumbaiCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் சந்தித்தன.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. ஜாம்ஷெட்பூர் அணியின் மாரியோ ஆர்க்யுஸ் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஜாம்ஷெட்பூர் அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் பாபியோ மார்கடோஸ் கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரள அணி கொல்கத்தாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கியஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

    நாளை பெங்களுரு எப்.சி மற்றும் சென்னை எப்.சி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. #ISL2018 #ATKvKBFC
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரளாவும், கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் தற்போது ஆட்டம் துவங்கி இருக்கும் நிலையில், இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். #ISL2018 #ATKvKBFC
    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் தனக்கு இருந்த பங்குகளை டெண்டுல்கர் சமீபத்தில் விற்ற நிலையில், அதனை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #KeralaBlasters #SachinTendulkar #Mohanlal
    திருவனந்தபுரம்:

    இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருந்தனர்.

    20 சதவிகித பங்குகளை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை உற்சாகப்படுத்தி வந்தார். சமீபத்தில், திடீரென தனது வசம் இருந்த பங்குகளை வேறு ஒருவருக்கு சச்சின் கைமாற்றினார்.

    இந்நிலையில், இந்த பங்குகளை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக அணியின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், அணியின் நல்லெண்ண தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் நேற்று நடந்த ஜெர்சி அறிமுக விழாவிலும் அவர் கலந்து கொண்டு ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்தார். 
    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையில் 20 சதவிகித பங்குகளை வைத்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது அதை வேறு ஒருவருக்கு கைமாற்றியுள்ளார். #KeralaBlasters #SachinTendulkar
    மும்பை:

    இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருக்கின்றனர். 

    20 சதவிகித பங்குகளை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில், திடீரென தனது வசம் இருந்த பங்குகளை வேறு ஒருவருக்கு சச்சின் கைமாற்றியுள்ளார். 

    ஹைபர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களை அதிகளவில் வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு இந்த பங்குகளை சச்சின் டெண்டுல்கர் விற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    ×