என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Iyappan"
- பந்தள ராஜா அய்யப்பா - பம்பா வாசா அய்யப்பா
- சாமி பாதம் ஐயன் பாதம் - ஐயன் பாதம் சாமி பாதம்
சுவாமியே அய்யப்போ- அய்யப்போ சுவாமியே
பகவானே பகவதியே- பகவதியே பகவானே
தேவனே தேவியே- தேவியே தேவனே
வில்லாளி வீரனே- வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே- வில்லாளி வீரனே
பகவான் சரணம்- பகவதி சரணம்
பகவதி சரணம்- பகவான் சரணம்
தேவன் சரணம்- தேவி சரணம்
தேவி சரணம்- தேவன் சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு- சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
பாத பலம்தா- தேக பலம்தா
தேக பலம்தா- பாத பலம்தா
கல்லும் முள்ளும்- காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
குண்டும் குழியும்- கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்- குண்டும் குழியும்
தாங்கி விடப்பா- ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா- தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா- ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம்- தூக்கி விடப்பா
சாமி பாதம் ஐயன் பாதம்- ஐயன் பாதம் சாமி பாதம்
யாரைக்காண- சாமியை காண
சாமியை கண்டால்- மோட்சம் கிட்டும்
கற்பூர ஜோதி- சுவாமிக்கே
நெய் அபிஷேகம்- சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம்- சுவாமிக்கே
முத்திரைத் தேங்காய்- சுவாமிக்கே
காணிப்பொன்னும் சாமிக்கே- வெற்றிலை அடக்கம் சாமிக்கே
கதலிப்பழம் சாமிக்கே- விபூதி அபிஷேகம் சாமிக்கே
கட்டுக்கட்டு- இருமுடிக்கட்டு
யாரோட கட்டு- சாமியோட கட்டு
சாமிமாரே- அய்யப்பமாரே
அய்யப்பமாரே- சாமிமாரே
பம்பா வாசா- பந்தள ராஜா
பந்தள ராஜா- பம்பா வாசா
சாமி அப்பா அய்யப்பா- சரணம் அப்பா அய்யப்பா
வாரோம் அப்பா அய்யப்பா- வந்தோம் அப்பா அய்யப்பா
பந்தள ராஜா அய்யப்பா- பம்பா வாசா அய்யப்பா
கரிமலை வாசா அய்யப்பா- கலியுக வரதா அய்யப்பா
- ஓம் அலங்காரப் பிரியனே சரணம் அய்யப்பா
- ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் அய்யப்பா
2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் அய்யப்பா
3. ஓம் அரிஹர சுதனே சரணம் அய்யப்பா
4. ஓம் அன்னதான பிரபுவே சரணம் அய்யப்பா
5. ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் அய்யப்பா
6. ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் அய்யப்பா
7. ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் அய்யப்பா
8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் அய்யப்பா
9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் அய்யப்பா
10. ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் அய்யப்பா
11. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் அய்யப்பா
12. ஓம் உலகாளும் காவலனே சரணம் அய்யப்பா
13. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் அய்யப்பா
14. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் அய்யப்பா
15. ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் அய்யப்பா
16. ஓம் ஏழைப்பங்காளனே சரணம் அய்யப்பா
17. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் அய்யப்பா
18. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் அய்யப்பா
19. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
20. ஓம் ஒப்பில்லாத திருமணியே சரணம் அய்யப்பா
21. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் அய்யப்பா
22. ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் அய்யப்பா
23. ஓம் ஒதும் மறைபொருளே சரணம் அய்யப்பா
24. ஓம் ஒளதடங்கள் அருள்பவனே சரணம் அய்யப்பா
25. ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் அய்யப்பா
26. ஓம் கலியுக வரதனே சரணம் அய்யப்பா
27. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் அய்யப்பா
28. ஓம் சிவன் மால் திருமகனே சரணம் அய்யப்பா
29. ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் அய்யப்பா
30. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் அய்யப்பா
31. ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் அய்யப்பா
32. ஓம் குளத்துப்புழை பாலகனே சரணம் அய்யப்பா
33. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் அய்யப்பா
34. ஓம் வில்லாளி வீரனே சரணம் அய்யப்பா
35. ஓம் வீரமணி கண்டனே சரணம் அய்யப்பா
36. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் அய்யப்பா
37. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் அய்யப்பா
38. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் அய்யப்பா
39. ஓம் பந்தள மாமணியே சரணம் அய்யப்பா
40. ஓம் சகலகலை வல்லோனே சரணம் அய்யப்பா
41. ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள் சரணம் அய்யப்பா
42. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் அய்யப்பா
43. ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் அய்யப்பா
44. ஓம் புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் அய்யப்பா
45. ஓம் வன்புலியின் வாகனனே சரணம் அய்யப்பா
46. ஓம் தாயின் நோய் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
47. ஓம் குருவின் குருவே சரணம் அய்யப்பா
48. ஓம் வாபரின் தோழனே சரணம் அய்யப்பா
49. ஓம் துளசிமணி மார்பனே சரணம் அய்யப்பா
50. ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் அய்யப்பா
51. ஓம் இருமுடிப்பிரியனே சரணம் அய்யப்பா
52. ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் அய்யப்பா
53. ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் அய்யப்பா
54. ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் அய்யப்பா
55. ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் அய்யப்பா
56. ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் அய்யப்பா
57. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் அய்யப்பா
58. ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் அய்யப்பா
59. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் அய்யப்பா
60. ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் அய்யப்பா
61. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் அய்யப்பா
62 ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் அய்யப்பா
63. ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் அய்யப்பா
64. ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் அய்யப்பா
65. ஓம் கல்லிடும் குன்றே சரணம் அய்யப்பா
66. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் அய்யப்பா
67. ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் அய்யப்பா
68. ஓம் கரியிலந்தோடே சரணம் அய்யப்பா
69. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் அய்யப்பா
70. ஓம் கரிமலை இறக்கமே சரணம் அய்யப்பா
71. ஓம் பெரியானை வட்டமே சரணம் அய்யப்பா
72. ஓம் சிறியானை வட்டமே சரணம் அய்யப்பா
73. ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் அய்யப்பா
74. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் அய்யப்பா
75. ஓம் திருவேணி சங்கமே சரணம் அய்யப்பா
76. ஓம் திரு இராமர் பாதமே சரணம் அய்யப்பா
77. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் அய்யப்பா
78. ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் அய்யப்பா
79. ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் அய்யப்பா
80. ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
81. ஓம் பம்பா விளக்கே சரணம் அய்யப்பா
82. ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் அய்யப்பா
83. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் அய்யப்பா
84. ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் அய்யப்பா
85. ஓம் நீலமலை ஏற்றமே சரணம் அய்யப்பா
86. ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் அய்யப்பா
87. ஓம் அப்பாச்சி மேடே சரணம் அய்யப்பா
88. ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் அய்யப்பா
89. ஓம் சபரி பீடமே சரணம் அய்யப்பா
90. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் அய்யப்பா
91. ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் அய்யப்பா
92. ஓம் கருப்பண்ண சாமியே சரணம் அய்யப்பா
93. ஓம் கடுத்த சாமியே சரணம் அய்யப்பா
94. ஓம் பதினெட்டாம் படியே சரணம் அய்யப்பா
95. ஓம் பகவானின் சன்னதியே சரணம் அய்யப்பா
96. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் அய்யப்பா
97. ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் அய்யப்பா
98. ஓம் கற்பூரப் பிரியனே சரணம் அய்யப்பா
99. ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் அய்யப்பா
100. ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் அய்யப்பா
101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் அய்யப்பா
102. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் அய்யப்பா
103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் அய்யப்பா
104. ஓம் பஸ்மக் குளமே சரணம் அய்யப்பா
105. ஓம் சற்குரு நாதனே சரணம் அய்யப்பா
106. ஓம் மகர ஜோதியே சரணம் அய்யப்பா
107. ஓம் ஜோதி சொரூபனே சரணம் அய்யப்பா
108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் அய்யப்பா
- சுவாமி என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால் சொல்லிப் படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.
- “ர” என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தர வல்லது என்று பொருள்.
சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது.
சுவாமி என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால் சொல்லிப் படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.
"ச" என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்காரம் என்று பொருள்.
"ர" என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தர வல்லது என்று பொருள்.
"ண" என்ற எழுத்திற்கு சாந்தத்தைத் தரவல்லது என்று பொருள்.
"ம்" முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களைப் போக்கவல்லது. சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்று பொருள்.
ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாக செலுத்தி,
நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து ""ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா"" என ஒலிக்கும்போது,
மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர அய்யப்பனை சரணடைகிறோம் என்று பொருள்.
- உளமார்ந்த பக்தியைத்தான் அய்யப்பன் விரும்புவார். கன்னி பூஜை நடத்துவது கட்டாயம் இல்லை.
- வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கி செய்வதை அய்யப்பன் விரும்ப மாட்டார்.
கன்னி பூஜை என்பது முதல் வருடம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்
தனது விரத காலத்தில் குருசாமிக்கு சவுகரியமான ஒரு நாளில் தனது வீட்டில் நடத்தும் பூஜையும்
அதைத் தொடர்ந்து அய்யப்பன்மார்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கும் விருந்தும் ஆகும்.
இந்தப் பூஜையை கன்னி அய்யப்பனின் வசதி வாய்ப்புக்குத் தகுந்தாற்போல் (இடவசதி, பண வசதிக்கு)
ஏற்றாற்போல் செய்தால் போதும். வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கி செய்வதை அய்யப்பன் விரும்ப மாட்டார்.
உளமார்ந்த பக்தியைத்தான் அய்யப்பன் விரும்புவார்.
கன்னி பூஜை நடத்துவது கட்டாயம் இல்லை.
பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் தனது பக்தன் உண்மையான பக்தியுடன் ஒரு இலை (துளசி),
ஒரு பழம், ஒரு பூ இதை தனக்குப் படைத்தால் கூட, தான் பூரண மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.
- ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது.
- அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம் தான் அந்த அரச மரம்.
ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது.
சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க 18 படிகள் ஏறுவதற்கு முன்பு அங்கே ஒரு அக்னி குண்டம் இருக்கும்.
அங்குதான் தேங்காய்களை போடுவார்கள். அதன் அருகில் ஓர் அரச மரம் இருக்கிறது. அது விசேஷமானது.
அய்யப்பன் மகிஷியை வதம் செய்த பின்னர்தான் அவருடைய அவதார காரணம் பூர்த்தியானது.
அதன் பின்னர் சபரிமலையில் தவம் இருப்பதற்காக அங்கிருந்து ஓர் அம்பை எய்ததாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ
அங்கு தனக்கு கோவில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார் அய்யப்பன்.
அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம்தான் அந்த அரச மரம்.
எனவே அந்த மரத்தின் முன்னால் நின்று நாம் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக அய்யப்பன் அருளால் நிறைவேறும்.
- ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!
- ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம
அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து இரட்சித்து அருள வேண்டும்.
ஓம் சத்தியமான பதினெட்டாம்படி மேல்
வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன்
அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!
காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம்
அடக்கியாளும், ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன்
ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!
பூதநாத சதானந்த சர்வ பூத தயாபரா
ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:
சுவாமியே சரணம் அய்யப்பா!
- தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.
- கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.
தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.
இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.
கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.
அவை எந்தெந்த இடங்கள், அந்த இடங்களில் தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து விரிவாக அறிவோம்.
கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்
திண்ணைகளில்: நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்
நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்
நடைகளில்: இரண்டு விளக்குகள்
முற்றத்தில்: நான்கு விளக்குகள்
இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால் நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்.
தீய சக்திகள் விலகியோடும்.
பூஜைஅறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.
சமையல் அறையில்: ஒரு விளக்கு அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.
பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.
ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில் மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது.
ஆகையால் வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால் தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.
- கழுத்தில் அழகான மணிகளுடனும், ஆபரணங்களுடனும் ஜனித்ததால் மணிகண்டன் என்ற திருப் பெயர் உண்டு.
- அய்யன் என்பதற்கு ‘மிக உயர்ந்தவர்’ என்று பொருள்.
பகவான் சாஸ்தா எடுத்த மானுட அவதாரத்தில், கழுத்தில் அழகான மணிகளுடனும், ஆபரணங்களுடனும் ஜனித்ததால்
மணிகண்டன் என்ற திருப் பெயர் அவருக்கு உண்டு.
ஆனால் அய்யப்பன் என்ற பெயர் வந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு.
சாஸ்தாவுக்கு அய்யன் என்று பிரசித்திபெற்ற பெயர் உண்டு.
திருமந்திரம் போன்ற பண்டைய நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
அய்யன் என்பதற்கு 'மிக உயர்ந்தவர்' என்று பொருள்.
இந்த அய்யன் வார்த்தைக்குப் பின்னால் ஆர் என்கிற பதத்தைச் சேர்த்து (அய்யன்+ஆர்) அய்யனார்
என்று தமிழ்நாட்டிலும், அப்பன் என்ற பதத்தைச் சேர்த்து அய்யன்+அப்பன் என்று கேரளத்திலும் அழைக்கப்பட்டார்.
- அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.
- அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.
அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.
நம்மில் பலரும் சுவாமி சின்முத்திரையை தமது கால் மூட்டின் மீது வைத்திருப்பதாக நினைக்கிறார்கள்.
அப்படியல்ல, அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.
இது நம்மை இந்த அண்ட சராசரத்துடன் தொடர்புகொள்ள வழி நடத்தும்.
சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் என மூன்று நிமிர்ந்த விரல்களும் அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை குறிக்கும்.
ஆள்காட்டி விரல் ஆத்மாவை குறிக்கிறது.
(நாம்&ஜீவாத்மா) கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கும் இந்த இரண்டு விரல்களின் இணைப்பு அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை அகற்றி ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதைக் குறிக்கும்.
இந்த சின்முத்திரைக்கு இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன. நான் ஒன்றை மட்டும்தான் விளக்கியிருக்கிறேன்.
- பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது.
- அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவர்.
பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது.
அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவர்.
இதன்படி ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து
பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும்.
இதன்படி செய்ய அவர் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால் தான்
மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.
இதனால்தான் விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தனர்.
- சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
- புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
ராகு கால பூஜைக்கான மலர்கள்
ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.
இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.
இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.
ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.
சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.
புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.
சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.
சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.
- மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
- மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.
இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!
ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.
அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.
உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.
மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.
அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.
மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.
புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.
புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.
தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்