search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jacket"

    அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ள முகாமுக்கு நேற்று சென்ற டிரம்ப் மனைவி அணிந்திருந்த கோட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MelaniaTrump
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை டிரம்ப் கொண்டு வந்தார். இதன்படி, சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை விட்டு தனியாக பிரித்து வைக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.

    ஐ.நா உள்ளிட்ட பல நாடுகள் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கூட இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இதனை அடுத்து, பெற்றோர் - குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள குழந்தைகள் முகாமை அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் நேற்று பார்வையிட்டார். காரில் இருந்து இறங்கிச்சென்ற அவர் அணிந்திருந்த கோட்டில் “I really don’t care, do u?”(நிஜமாகவே எனக்கு கவலையில்லை. உங்களுக்கு?) என எழுதப்பட்டிருந்தது.

    முகாமை பார்வையிட்ட பின் மீண்டும் அவர் காருக்கு திரும்பும் போதும் இதே கோட்டை அணிந்திருந்தார். இதனை அடுத்து, இணையத்தில் பலர் மெலனியாவின் இந்த கோட் கருத்தை விமர்சிக்க தொடங்கினர். 

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த மெலானியாவின் செய்தி தொடர்பாளர், “அது வெறும் கோட்தான். அதில் உள்ள கருத்துக்கு எந்த உள் அர்த்தமும் கற்பிக்க வேண்டாம். முக்கியமாக அவர் குழந்தைகள் முகாமுக்கு சென்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த உடையின் மீது மீடியாக்கள் கவனம் செலுத்த வேண்டாம்” என கூறினார்.

    ×