என் மலர்
நீங்கள் தேடியது "Jadhagam"
- கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.
- புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடு
புதன் பகவான்!
கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.
புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுவதோடு, புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயரும் உண்டு.
புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடுவார்.
திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர்.
சந்திரனின் மைந்தன் புதன் இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.
புதனின் பகவானுக்கு உகந்தது:
நிறம் - பச்சை,
தானியம் - பச்சை பயறு,
நவரத்தினம் - மரகதம்,
உலோகம் - பித்தளை,
பருவம் - இலையுதிர் காலம்,
பஞ்ச பூதம் - நிலம் ஆகும்.
புத பகவான்-காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்;
எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.
புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவானை வழிபட எல்லா நலன்களையும் பெற்று வாழலாம்.
நாம் வீட்டில் பூஜை செய்யும்போது 5 மண் விளக்கு ஏற்றி வழிபடுவதோடு, இஷ்ட தெய்வத்தை வணங்கி அதோடு பெருமாளை வழிபடலாம்.
மேலும் அந்த நாளில் பச்சை பயறு வேகவைத்து பசு மாட்டுக்கு கொடுப்பது நல்லது.
- குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.
வியாழன்-குருபகவான்
குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.
குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.
இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.
''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)
அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.
கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.
ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்
கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.
குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.
குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.
குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.
வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.
மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.
- தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
- சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.
சுக்கிரன்
தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
இவரே சுக்கிர பகவானாகப் போற்றப்படுகிறார்.
சுக்கிர பகவானின் திசை கிழக்கு என்றும் சுக்கிரனின் அதிதேவதை இந்திராணி என்றும் பிரத்யதி தேவதை இந்திரன் என்றும் சுக்கிர பகவானை வணங்கி வழிபடுவதற்கு உரிய திருத்தலம் ஸ்ரீரங்கம் என்றும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.
சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் எனப்படுவார். உலக வாழ்வில், எத்தனை சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருள்பவர் சுக்கிர பகவான்.
குறிப்பாக மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன்.
அதற்கு அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் தான்.
சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.
சுக்கிர பகவானுக்கு உரிய சுக்கிர வாரத்தில் சுக்கிர ஹோரையில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.
சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயத்!
என்கிற சுக்கிர பகவானின் காயத்ரியை ஜபித்து வருவது இன்னுமான பல பலன்களையும் யோகங்களையும் தந்தருளும்.
வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எந்தநாளில் வேண்டுமானாலும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வழிபடலாம்.
குறிப்பாக, ஒவ்வொரு நாளிலும் வருகிற சுக்கிர ஹோரை நேரத்தில் வீட்டில் அமர்ந்தபடி சுக்கிர பகவான் காயத்ரி சொல்லி வழிபடுவது, சகல சம்பத்துகளையும் வழங்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
- ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.
சனிபகவான்
சங்கடந்தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா
மாமன்னர்களையும் மகாபுருஷர்களையும் கூட விட்டுவைக்காத சக்தி வாய்ந்தவர் சனிபகவான்.
இவர் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாதபாடு படுத்தி வைத்தவராவார்.
அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவாரகத் திகழும் பேறு பெற்றவர் அவர்.
நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவர் என்பதால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.
எவரது ஜாதகத்தில் சனி பலம் மற்றும், சுமுகமான ஆதிபத்தியத்துடன் விளங்குகின்றாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள்.
ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டக சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநாள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும்.
காகத்திற்கு தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.
செய்தொழிலில் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய பதவிக்கு வரக்கூடிய ஆற்றலை சனி ஒருவராலேயே அளிக்க முடியும்.
துலாம், மகரம், கும்பம் அகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தினால் ஆயுள், ஆரோக்கியம், செய்தொழில் அகியவற்றில் விசேஷ நன்மைகளை செய்வார்.
ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீச்சம் பெற்றோ அல்லது லக்கினத்திலிருந்து 4 அல்லது 7 அல்லது 8 ம் இடங்களில் இருப்பின்,
அவர்கள் கண்டிப்பாகத் தினமும் சனிபகவானையும், பித்ருக்களையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் அவசியம்.
வேறு விதங்களில் சனிபகவான் அனுகூலமில்லாமல் இருந்தாலும் பரிகாரம் மிகவும் அவசியம்.
சனிபகவானால் ஏற்படக்கூடிய ஏழு வகை தோஷங்களுக்கு மட்டும் பரிகாரம் கிடையாது.
இந்த ஏழு தோஷங்களுக்கு தொழில், ஆயுள் அல்லது ஆரோக்கியம் அகியவற்றைக் கடுமையாக பாதிக்கும்.
மற்ற தோஷங்கள் அனைத்தும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே.
சனிபகவான் திருவுள்ளம் மகிழ்ந்த பரிகாரத் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, பிரசித்தி பெற்றது திருநாள்ளாறு ஆகும்.
வேத காலத்திலிருந்தே இந்த தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானுக்கும் அருள் புரிந்த பேரருளாளர் ஆவார்.
இன்றும் சனி, தர்ப்பாரண்யேஸ்வரரைப் பூஜித்து வருவதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.
நைடத நாட்டின் மாமன்னான நளன் சனிபகவானையும், ஈஸ்வரனையும் பூஜித்துத் துன்பங்கள் விலகி, தன் மனைவி தமயந்தியுடன் இழந்த நாட்டையும், ஐஸ்வரியங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்த திருத்தலம் இது.
1.திருநாள்ளாறு சென்று, தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பிகை, சனிபகவான் மூலவரையும் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வரவும். (நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு தரிசித்தல் முறை)
2.பித்ரூ பூஜை, சனிபகவானுக்கு மிகவும் பிடித்த பூஜை அகும் என்று நாரத மகரிஷி கூறுவதாகப்புராண நூல்கள் கூறுகின்றன. பித்ருக்களுக்காகத் தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும் இதனை உறுதி செய்கிறது. காகம் சனியின் வாகனம் ஆகும்.
3.சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் சனிபகவானுக்காகத் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வருவது.
4.சனிக்கிழமைகளில் உடல் ஊனமற்றவர்கள், எளியவர்கள் ஆகியோருக்கு வஸ்திரம் அளித்தும், உணவு கொடுப்பது.
5.எள் கலந்த சாதம் ஏழைகளுக்கு அளிப்பது.
6.வீட்டில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி வைப்பது.
7.தினமும் சனி துதியையும், சனி காயத்திரியையும் கூறி வருதல் (108 தடவைகள் கூறுவது உத்தமம்)
இவற்றில் எது செய்தாலும், சனிபகவானுக்குப் பிரியமானதே.
- தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
- மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.
ராகு-கேது
ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடியது ஒரு பயமும் பதற்றமும் தான்.
ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பாவபலன்களை அப்படியே கொடுக்கும்.
தாத்தா - பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது.
தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணர வைப்பதிலும் ராகு - கேதுக்களே முதன்மையானது.
ஒருவருடைய மன நிலையில் அகம் - புறம் சார்ந்த செயல்பாடுகளிலும் கூட ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.
வெளிப்புற பொருட்கள் வாங்குவதில், ஏற்படக்கூடிய, எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை.
உதாரணமாக, பேனா வாங்க வேண்டும் என்று மாணவனுக்கு ஆசை. ஆனால், பணம் அப்பாவிடம் கேட்டால் திட்டுவார் என்ற மனநிலை.
இந்த நிலைகளையும், ஒரே நேரத்தில், ஸ்தம்பித்து, ஒருவருடைய ஆசையையும், ஆசையினால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளையும், ஒப்பீடு செய்து, ஒரு குழப்ப நிலையை, ஏற்படுத்துவதில் இந்த ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.
அகப்பொருளில், ஆத்ம நிலையை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம், சித்தப் பிரமை நிலையை ஏற்படுத்தி, ஒரு மயக்க நிலையை கொண்டு வரும். இவை அனைத்தும் கேதுவின் தன்மையே.
இதுவும் கூட ஒரு மாயையின் வெளிப்பாடுதான்.
ஆக, புறத்தன்மை மற்றம் அகத்தன்மையிலும் ஏற்படக்கூடிய மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.
ராகு – கேது தோஷம் பற்றி
இன்றைய நவீன உலகத்தில், பல திருமண வாழ்க்கையில், ஜாதக குறிப்பில் ராகு கேது தோஷம் என குறிப்பிடப்படுள்ளது.
ராகு - கேது தோஷம் என்பது பொதுவாக, எதிர்பார்ப்புகள், இல்லாத ஒன்றை கற்பனையாக இருப்பதுபோல் எண்ணுதல், அதீத ஆசைப்படுதல் ஆகிய ஒரு மாய பிம்பம் போன்ற குணங்களை குறிப்பது ராகுவின் தன்மையாகவும்,
கேது என்பது எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத, மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்து தன் மனதிற்குள் பொங்குதல், இருப்பதை உணராதது, தன்னிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது, மற்றவர்களுடன் ஒப்பிடுதல், இவை எதுவும் வெளியில் தெரியாமல் இருத்தல், தனக்குத் தானே சூன்யம் வைத்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் என குறிப்பிடலாம்.
பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னத்திலோ, இரண்டிலேயோ, ஏழிலேயோ, அல்லது 8-ல் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள, எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் அதீத எதிர்பார்ப்பும்,
எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாமலும், இந்த ராகு கேதுக்கள் திருமணத்தில் பங்களிப்பு அதிகமாக எடுத்துக் கொண்டு, தோஷமாக கருதப்படுகிறது.
ஆனால், எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் எதிர்பார்ப்பு இல்லாமலும், எதிர்ப்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு எதிர்பார்ப்புடனும் இருந்தால், திருமண வாழ்வு சிறக்கும்.
உதாரணமாக, ஒரு ஆண் வரதட்சணையாக 100 சவரன் தங்க நகை வேண்டும் என பேராசைப்படுகிறான்.
அப்போது அந்த திருமணம் தடையாகிறது. ஒரு ஜாதகர், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்ல வரன் அமைந்தால் போதும் என்பதால், எதிர்பாலினர் ஆணிடமோ பெண்ணிடமோ ஏதோ குறை உள்ளது என்ற சந்தேகத்திற்கு ஆளகிறார்கள்.
அதுவே மிகப் பெரிய தடையாகிறது. ஆக, பேராசையும், சந்தேகமும் ராகு கேதுக்களுடைய தன்மையாக மிகப் பெரிய தடையை ஏற்படுத்துகிறது.
ஆனால், இன்றைய வளர்ச்சியின் காரணத்தால், திருமண பொருத்தத்தில் ராகு கேதுக்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.
ஒருவர் கேட்ட கேள்வி, "ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருப்பதால், தோஷம் என்று சொன்னார்கள், ஆனால், திருமணம் தகுந்த காலத்தில் நடந்து, திருமண வாழக்கை நன்றாகவே இருக்கிறார்களே,
மேலும் வேறு ஒருவருடைய, ஜாதகத்தில் ராகு கேது தோஷமே இல்லை, ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி நல்லவிதமாகவும் இல்லை, அது எப்படி, எதனால்" என்று கேட்டார்.
அப்படி, திருமணமாகி பிரச்சினையான ஜாதகமும் இருக்கிறது. அதற்கு ராகு கேதுவின் தாக்கம் தான் காரணம், என்றே தவறான புரிதலில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, சரியான புரிதலுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஜென்ம லக்னத்தில், ராகுவோ, கேதுவோ லக்னத்தில் இருந்தால், ராகு கேது தோஷத்தால், திருமணம் பாதிக்கும் என்ற கூற்று நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.
கிரகங்கள் கொடுத்து கொண்டேதான் இருக்கும். அதை வாங்குவதற்கான, நம்பிக்கை இல்லாமையும், பொறுமை இல்லாமையும், இயலாமையும்தான் ஒரு காரணிகளாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்குகிறது எனலாம்.
உதாரணமாக, நன்றாக படிக்கக் கூடிய மாணவனை, உனக்கு புரியாது மற்றும் உனக்கு முடியாது, நீ அடி முட்டாள் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது,
அந்த மாணவன் மன அளவிலும் உடல் அளவிலும், சோர்வு தன்மையும், மறதியும், தன்னை ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கிக்கொண்டு விளங்குவதையும்,
அதே வகுப்பில் ஒரு சராசரி குழந்தையை உன்னால் முடியும், நீ முயற்சி செய், கண்டிப்பாக உன்னால் வெற்றி பெற முடியும் என்று சொல்லும் போது, மிகப் பெரிய புத்திசாலியாவதையும் பார்க்கலாம்.
இந்த நிகழ்வில், ராகு - கேது பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பார்ப்போம்.
நல்லவித எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் ஒருவரை நல்லவராகவும், திட்டும் போது கெட்டவராகவும் எதிரியாகவும் மனம் பாவிக்கும்.
அதேபோல்தான், இந்த ராகு கேதுக்கள், கொடுக்கமாட்டார், துன்புறத்துவார், கஷ்டங்களை கொடுப்பார் என்று கிரகங்களை சொல்லும் போது, இந்த எதிர்மறையான வார்த்தைகளும், எண்ணங்களும் ஒருவர் மனங்களில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே போல் கிரகங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மக்களின் அதிருப்திக்கு காரணம் அவர்களுடைய எதிர்பார்ப்பின் அளவுகோலே. ஆனால், ராகு கேதுக்கள் அதீத யோகத்தை தரக் கூடியவர்களே.
- வியாழனுக்குரிய சிவத்தலம்-ஆலங்குடி வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி
- அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
நவ திருத்தலங்கள்
சூரியன்
சிவத்தலம் -சூரியனார் கோயில்
வைணவத்தலம்-திருவைகுண்டம்
சுக்கிரன்
சிவத்தலம்-கஞ்சனூர்
வைணவத்தலம்-தென் திருப்போரை
புதன்
சிவத்தலம்-திருவெண்காடு
வைணவத்தலம்-திருப்புளியங்குடி
செவ்வாய்
சிவத்தலம்-வைதீஸ்வரன்
வைணவத்தலம்-திருக்கோளூர்
கேது
சிவத்தலம்-கீழப்பெரும் பள்ளம்
வைணவத்தலம்-இரட்டை திருப்பதி
சனி
சிவத்தலம்-திருநள்ளாறு
வைணவத்தலம்-திருக்குளந்தை
வியாழன்
சிவத்தலம்-ஆலங்குடி
வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி
சந்திரன்
சிவத்தலம்-திங்களூர்
வைணவத்தலம்-வரகுணமங்கை
ராகு
சிவத்தலம்-திருநாகேசுவரம்
வைணவத்தலம்-இரட்டை திருப்பதி
எத்தனை சுற்று சுற்றுவது?
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன்10 சுற்றுகள்
சுக்கிரன்6 சுற்றுகள்
சந்திரன்11 சுற்றுகள்
சனி8 சுற்றுகள்
செவ்வாய்9 சுற்றுகள்
ராகு4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன்5, 12, 23 சுற்றுகள்
கேது 9 சுற்றுகள்
வியாழன்3, 12, 21 சுற்றுகள்