என் மலர்
நீங்கள் தேடியது "Jai"
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தளபதி 68'.
- இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

'தளபதி 68' படத்தின் நடிகர், நடிகைக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய்-ஐ நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. 'பகவதி' படத்தை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் நடிகர் ஜெய் இணையவுள்ளதாக வெளியாகும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சுப்ரமணியபுரம்'.
- இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்துள்ளது.
சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சுப்ரமணியபுரம் போஸ்டர்
இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளது. இதனை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தளபதி 68'.
- 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய் விஜய்யுடன் இப்படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

'தளபதி 68' படத்தின் நடிகர், நடிகைக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய்-ஐ நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பகவதி' படத்தை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் நடிகர் ஜெய் இணையவுள்ளதாக வெளியாகும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சசிகுமார் இயக்கத்தில் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் 15 ஆண்டுகளை பிறகு மீண்டும் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் சசிகுமார் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'சுப்ரமணியபுரம்' படத்தின் புதிய வெர்ஷன் டிரைலரை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
- சசிகுமார் இயக்கத்தில் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் 15 ஆண்டுகளை பிறகு இன்று மீண்டும் வெளியானது.
- இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 4-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் சுப்ரமணியபுரம்' படம் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. வடபழனி கமலா தியேட்டரில் இன்று காலை திரையிடப்பட்ட 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய் ஆகியோர் வந்தனர். அதன்பின்னர் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
- சசிகுமார் இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் 'சுப்ரமணியபுரம்'.
- இப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியானது.
சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 4-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியானது. இப்படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய், கஞ்சா கருப்பு ஆகியோர் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெய், "எல்லாருக்கும் மிக்க நன்றி. முதல் நாள் முதல் காட்சியை விட ரீ ரிலீஸுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. இத்தனை வருடத்திற்கு பிறகு இந்த படத்தின் மீது இவ்வளவு மரியாதை இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. சசிகுமாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இன்று அவர் இல்லையென்றால் நான் இல்லை" என்று பேசினார்.
மேலும், பேசிய சசிகுமார், "14 வருடங்களுக்கு முன்பு 'சுப்பிரமணியபுரம் ரிலீஸாகும் போது எங்களால் முதல் காட்சி பார்க்க முடியவில்லை. இன்று 8 மணி காட்சி கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தளபதி 68'.
- இப்படத்திற்காக அஜித், தன்னை வாழ்த்தியாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் 'தளபதி 68' படத்திற்காக அஜித் உங்களை வாழ்த்தினாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, தளபதி 68 படத்திற்கு முதல் வாழ்த்து கூறியவர் நடிகர் அஜித் தான் என்றார்.
- அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'.
- இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்த வெப்தொடரின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலர் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது. 'லேபில்' வெப் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அருண்ராஜா காமராஜ் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.
- இந்த வெப் தொடரில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், லேபில் என்றால் என்ன என்பது குறித்து பொது மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒரு சிலர், லேபில் என்பது புத்தகத்தில் ஒட்டுவது என்றும் துணியுடன் வருவது என்றும் கூறினர். இதே கேள்வியை வட சென்னை மக்களிடம் கேட்டபோது அவர்கள், "லேபில் என்பது ஒரு கெத்து. இந்த இடத்தில் யார் பெரிய ஆளோ அவரே லேபில். வட சென்னையை பொறுத்தவரை யார் லேபில் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொருவர் இருப்பார்கள். நாம் யாரை பார்த்து பயப்படுகிறோமோ அவர்தான் லேபில்" என்று கூறினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'.
- இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

லேபில் போஸ்டர்
இந்நிலையில், 'லேபில்' வெப்தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வெப்தொடர் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது.
- பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.

சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5-ஆம் வருட கேக் மிக்ஸிங் விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குனர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
- ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார்.
- இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இப்படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மனுஷி' படத்தை இயக்கினார். இப்படம் குறித்த தகவல் எதுவும் பின்னர் வெளியாகவில்லை.

கருப்பர் நகரம் போஸ்டர்
இயக்குனர் கோபி நயினார் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ஆர்.பிலிம் மேக்கர்ஸ் மற்றும் ஏ.ஜி.எல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருப்பர் நகரம்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.