search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail coimbatore"

    காங்கயம் அருகே போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் மோகன்ராஜ் (வயது 29). இவர் நேற்று மாலை ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கார்த்திக்(35) என்பவருடன் சேர்ந்து காங்கேயம்-திருப்பூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது காங்கேயத்தில் இருந்து சிவன்மலையை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் தாறுமாறாக வந்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்து மோகன்ராஜ் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

    ஒரு வாலிபர் மட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து போலீஸ்காரரிடம் பதில் அளித்து கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதனை பார்த்த போலீஸ்காரர் மோகன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வாலிபர்களை துரத்தி சென்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று சிவன்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வாலிபர்களை மடக்கி பிடித்தார். அப்போது 2 வாலிபர்களில் ஒருவர் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றி போலீஸ்காரர் மோகன்ராஜை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    போலீஸ்காரரை வாலிபர்கள் தாக்குவதை பார்த்து. பொதுமக்கள் 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர். ஏற்கனவே ஊர்காவல்படை வீரர் கார்த்திக், இவர்களுடன் வந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விட்டார்.

    வாலிபர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த மோகன்ராஜ் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் பிடிபட்ட 3 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(28), ராஜா (21), சக்திவேல் (19) என்பதும் இவர்கள் 3 பேரும் காங்கேயம் அருகே உள்ள படியூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×