என் மலர்
நீங்கள் தேடியது "Jailer 2"
- ஜெயிலர் 2' படத்திலும் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
- கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.
முதல் பாகத்தை போல 'ஜெயிலர் 2' படத்திலும் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ் குமார், "எனக்கு அமிதாப் பச்சன், கமல்ஹாசன் தான் மிகவும் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.
ஒருமுறை அவர் வீட்டுக்கு வரப்போ நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். யார் இது என்று என் அப்பாவிடம் கமல் சார் கேட்க, என் பையன் தான் என்று சொன்னார். அப்போ கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். மூணு நாள் நான் குளிக்கவே இல்லை. ஏன்னா, அவருடைய ஆரா மற்றும் ஸ்மெல் என் மீது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாதிரி ஒரு ரசிகன் நான்" என்று தெரிவித்தார்.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்.
- இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இன்று கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த ஸ்கெடியுல் 35 நாட்கள் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு, ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் என பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் அப்பதிவை பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்.
- படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ரஜினிகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் இன்று கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனை அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் மிர்னா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவாக வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- ‘ஜெயிலர்-2' படத்துக்கு பிறகு நெல்சன் யாரை இயக்க போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
- புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கி கவனிக்க வைத்தவர், நெல்சன். ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'ஜெயிலர்' படம் மூலம் முன்னணி இயக்குனராகவும் உயர்ந்து நிற்கிறார். இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள நெல்சன், தற்போது ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்-2' படத்தை இயக்கி வருகிறார்.
'ஜெயிலர்-2' படத்துக்கு பிறகு நெல்சன் யாரை இயக்க போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் கைகோர்ப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை ஜூனியர் என்.டி.ஆரும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர்., 'நெல்சன் இயக்கத்தில் படம் நடிக்க ஆசைப்படுகிறார். நாக வம்சி (முன்னணி தயாரிப்பாளர்) மனது வைத்து வேகமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்', என்றார்.
இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். - நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாக போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
- ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் 'பொன் ஒன்று கண்டேன்' படம்.
- 'ஜெயிலர் 2' வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி.
'தரமணி', 'ராக்கி', 'அஸ்வின்ஸ்' என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் 'பொன் ஒன்று கண்டேன்'.
ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள்.

இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நிறைய பேர் என்னிடம் எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்? என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் 'பொன் ஒன்று கண்டேன்' படம் வந்திருக்கிறது.
நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே 'ஜெயிலர்' படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.
'உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை' என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அடுத்து 'வெப்பன்' என்ற ஆக்ஷன் படத்திலும், 'இந்திரா' என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது.
'ஜெயிலர் 2' வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். 'ஜெயிலர்' படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், 'ஜெயிலர்2' என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆனால், 'ஜெயிலர்' கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம்' "பார்ட்-2க்கான லீட் இருக்கு சார்" என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
- ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர்.
ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.
ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்து விட்டு கூலி படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயிலர் 2 திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் நெல்சன் ஈடுப்பட்டு வருகிறார்.
- படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் மக்களால் ரசிக்கப்பட்டது. இவருடன் இந்திய சினிமா பிரபலங்களான ஜாக்கி செராஃப், மோகன் லால், சிவராஜ் குமார் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தது படத்திற்கு கூடுதல் பலம்.
ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் நெல்சன் ஈடுப்பட்டு வருகிறார்.
இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.
தற்பொழுது ஜெயிலர்-2 படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த நேர்காணலில் யோகி பாபு கூறியுள்ளார். இந்த பாகத்திலும் அவருடைய நகைச்சுவை காட்சிகள் ரசிக்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று
- ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் முடிவடைந்தள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் முடிவடைந்த நிலையில். இரண்டாம் பாகம் குறித்து இன்று அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு `ஹுகும்' என்ற தலைப்பு வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. படத்தில் மோகன் லால், சிவா ராஜ்குமார், யோகி பாபு மற்றும் பல இந்தி மற்றும் தமிழ் நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'.
- படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டனர்.
இதுக்குறித்து நெல்சன் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜெயிலர் 2 - க்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் அதற்கான அதிகார்ப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமே அதை வெளியிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
சென்ற முறை ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் நெல்சனுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதேப்போல் இந்த முறை படம் வெற்றிக்கு என்ன வேண்டும் என சில கார்கள் மற்றும் பிரைவேட் ஜெட்டுகளின் புகைப்படங்கள் நிகழ்சசியின் தொகுப்பாளர்கள் காட்டியபோது . நெல்சன் `ஜெட் தான் எனக்கு வேண்டு. இலவசமாக கொடுக்கப்போறாங்க பெருசா வாங்கிட்டு அதை செகண்ட் ஹாண்ட் ல வித்துடுவேன்' என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர்
- 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன்.அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின்படி 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள நெல்சன், கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிளடி பெக்கர்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொண்ட நெல்சன், 'ஜெயிலர் 2' படம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது, ஜெயிலர் 2 படம் தான் தனது அடுத்த படம் என்று தெரிவித்துள்ளார். எனவே ரஜினி, தனது 171-வது படமான 'கூலி' திரைப்படத்தை முடித்த பின்பு நெல்சன், ரஜினி கூட்டணியில் 'ஜெயிலர் 2' திரைப்படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் எனத் தகவல்.
- அதனுடன் ஜெயலர் 2 ப்ரோமோவும் வெளியாகும என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 12-ந்தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் "ஜெய்லர் 2" படத்திற்கான ப்ரோமோவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான "ப்ரோமோ சூட்" டிசம்பர் 5-ந்தேதி தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது. EVP-ல் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார். இந்த படம் தொடர்பான புது அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாள் அன்று இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.
ஜெய்லர் படத்தில் ரஜியுடன் வினாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.
- தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் "ப்ரோமோ சூட்" பணிகள் கடந்த மாதம் நடைப்பெற்றது.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் திரைப்படத்தின் அறிவிப்பை விரைவில் அறிவிக்கப்போவதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பொங்கலை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகும் எனவும் இது ஜெயிலர் 2 திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜியுடன் வினாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.