search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamaica Tallawahs"

    கயானாவில் நடைபெற்ற கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஜமைக்காவை வெளியேற்றியது செயிண்ட் கிட்ஸ் அணி. #CPL2018
    மேற்கிந்திய தீவில் உள்ள கயானாவில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று நடைபெற்றது.
    இதில் கிறிஸ் கெயில் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலைமையிலான ஜமைக்கா தலைவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, ஜமைக்கா தலைவாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 63 பந்துகளில் 103 ரன்னில் அவுட்டானார். அவரை தவிர மற்ற யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜமைக்கா தலைவாஸ் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயிண்ட் கிட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆண்டன் டேவ்சிச் 23 பந்தில் 50 ரன்கள் அடித்து வெளியேறினார்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காவிட்டாலும் பவுண்டரிகள், சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியாக, செயிண்ட் கிட்ஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆண்டன் டேவ்சிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜமைக்கா அணி தொடரில் இருந்து வெளியேறியது. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜமைக்கா. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 லீக்கில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் களம் இறங்கியது. கேமரூன் டெல்போர்ட் (34), ஷிம்ரோன் ஹெட்மையர் (48), ஜேசன் முகமது (54) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது.


    இம்ரான் தாஹிர்

    பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா தல்லாவாஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் க்ளென் பிலிப்ஸ் (27), ஜான்சன் சார்லஸ் (25) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ராஸ் டெய்லர் (60), ரோவ்மேன் பொவேல் (55) ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி ஜமைக்கா அணி 18.1 ஓவரில் 177 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வந்த ஆடம் ஜம்பா சொந்த நாடு திரும்புவதால் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார். #CPL
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார்.

    இதனால் ஜமைக்கா அணி ஆடம் ஜம்பாவிற்குப் பதிலாக இஷ் சோதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த சீசனில் ஜம்பா 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.


    ஆடம் ஜம்பா

    2013-ம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமான இஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ், நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ், நட்டிங்காம்ஷைர், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் வெற்றி பெற்றன. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பார்படோஸ் டிரிடென்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் 35 பந்தில் 54 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல் டக்அவுட்டிலும், எவின் லெவிஸ் 1 ரன்னில் வெளியேறினாலும், பிராண்டன் கிங் 60 ரன்களும், டேவன் தாமஸ் 32 ரன்களும், பென் கட்டிங் 29 ரன்களும் அடிக்க 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது இர்பான் 4 ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும் மற்ற பவுலர்கள் அதிக ரன்கள் கொடுத்ததால் பார்படோஸ் அணி வெற்றியை இழந்தது.


    க்ளீன் போல்டாகும் லென்டில் சிம்மன்ஸ்

    மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா தல்லாவாஸ் ரோவ்மன் பொவேல் (64), டேவிட் மில்லர் (13 பந்தில் 32 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

    பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. வார்னர் 42 ரன்னும், பொல்லார்டு 46 ரன்னும், லென்டில் சிம்மன்ஸ் 45 ரன்னும் அடித்தாலும் செயின்ட் லூசியாவில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜமைக்கா தல்லாவாஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னனான அந்த்ரே ரஸல் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #CPL #AndreRussell
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் உலகளவில் நடைபெறும் முன்னணி டி20 லீக்குகளான ஐபிஎல், சிபில், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனைக்கு தன்னை உட்படுத்தாததால் ஓராண்டு தடைபெற்றார். அதன்பின் சமீபத்தில் நடைபெற்று முடிந்து ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

    விரைவில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் இடம்பித்துள்ள ஜமைக்கா தல்லாவாஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘ஒரு வருடம் தடைக்குப்பின் மீண்டும் களத்திற்கு திரும்பிய பிறகு, கேப்டன் பதவி கிடைத்திருப்பது சிறந்த உணர்வாக உள்ளது. ஒரு வீரராக மட்டுமல்ல, ஜமைக்கா தல்லாவாஸ் கேப்டனாக தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.



    நாங்கள் சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியை பெற்றுள்ளோம். வெறும் பெயரை மட்டும் வைத்து அணியில்லை. எப்படி விளையாடுகிறார்கள். விரைவாக ஆட்டத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அணி. நாங்கள் ஏராளமான ஆல்ரவுண்டர்களை பெற்றுள்ளோம் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் அணியில் இடம்பிடித்துள்ள 8 வீரர்களால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.
    ×