என் மலர்
நீங்கள் தேடியது "james bond"
- "நோ டைம் டு டை" என்ற பாண்ட் திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது.
- அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஹாலிவுட்டில் எடுக்கப்படம் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை ஏராளமான பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. எனினும், ஒவ்வொரு முறை புதிய ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகும் போதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறியதில்லை. கடைசியாக "நோ டைம் டு டை" என்ற பாண்ட் திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். நோ டைம் டு டை படத்தை சேர்த்து இவர் 16 ஆண்டுகளில் ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டுடன் பாண்ட் படத்தில் நடிப்பதை டேனியல் கிரேக் நிறுத்திக் கொண்டார். இவர் விலகியதை தொடர்ந்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது உலகம் முழுக்க கேள்விக்குறியாகவே உள்ளது.

இன்றுவரை இந்த கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவர் தான் என கூறும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மார்வல் படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆரோன் டெய்லர் ஜான்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஜேம்ஸ் பாண்ட் படங்களை எடுக்கும் இயான் ப்ரோடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் அடுத்த பாண்ட் நடிகர் பற்றி கேள்வி எழுப்பியது. அதற்கு யூகங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், படத்தயாரிப்பு நிறுவனம் சார்ந்த தகவல்களில் அடுத்த பாண்ட் நடிகர் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக கூறப்படுவது பற்றி டெய்லர் ஜான்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "மக்கள் என்னை அந்த பாத்திரத்தில் பார்ப்பது அருமையாக இருக்கிறது. இவற்றை நான் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- அனா செலியா டி அர்மாஸ் கேஸோ என்பது இவரின் முழு பெயர்.
- நடிகர் பென் அப்லெக் உடன் காதலில் இருந்த அர்மாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டார்.
ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' [ 2021], கிணைவ்ஸ் அவுட் [2019], பிளேட் ரன்னர் 2049, ஜான் விக் நடிகர் கியானு ரீவ்ஸ் நடித்த கினாக் கினாக் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்ற நடிகையாக ஹாலிவுட் அரங்கில் வளம் வருபவர் அனா டி அர்மாஸ். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'THE BLONDE ' படத்தில் தனது நடிப்புக்காக ஆஸ்கார் தேர்வு பட்டியலிலும் இடம்பெற்றார்.
அனா செலியா டி அர்மாஸ் கேஸோ என்பது இவரின் முழு பெயர்.கியூபா - ஸ்பானிய வம்சாவளியை சேர்ந்தவர் இவர். இவரின் தாய் வழியினர் ஸ்பெயினை சேர்த்தவர்கள் ஆவர். கியூபாவில் 1988 இல் பிறந்த அர்மாஸ் அந்நாட்டில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் தோன்றினார். கியூபாவை சேர்ந்த நடிகைகளுள் ஹாலிவுட் வரை சென்று அதிக புகழை ஈட்டியவர் அர்மாஸ். இந்நிலையில் தற்போது கியூபா நாட்டின் அதிபர் மிகுவல் டியாஸ்-கேனல் அவரது மகன் [ stepson ] மானுவல் அனிடோ கஸ்டா உடன் ஸ்பெயினில் ஒன்றாக அனா டி அர்மாஸ் நேரம் செலவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் மாத்ரித் பகுதியில் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக யூகிக்கப்படுகிறது. முன்னதாக ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் உடன் காதலில் இருந்த ஆஅர்மாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டார்.

இருவரும் டீப் வாட்டர் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன்பின் பென் அப்லெக், பாடகி மற்றும் நடிகை ஜெனிபர் லோபஸ் ஐ 2022 இல் மணந்து 2024 இல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
- நகைச்சுவை நடிகர் பென்னி ஹில் உடன் பல்வேறு இரட்டை நடிப்பில் நடித்துள்ளார்.
- எக்ஸ்பிரஸ்ஸோ போங்கோ, பாடல் புத்தகம் மற்றும் பாப்பி உள்ளிட்ட மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு தீம் ட்யூனை தயாரித்த பிரிட்டிஷ் இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார். அவருக்கு வயது 94. இவரது மறைவு குறித்து, நார்மனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மாண்டி நார்மன் 11 ஜூலை 2022 அன்று ஒரு குறுகிய நோய்க்குப் பிறகு இறந்தார் என்ற செய்தியை நாங்கள் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
1928-ல் லண்டனின் கிழக்கு முனையில் யூதப் பெற்றோருக்கு மாண்டி நார்மன் பிறந்தார். இவர் தனது16 வயதில் முதல் கிட்டார் இசைக் கருவியை பெற்றார்.
ஆரம்பகாலத்தில் பிரிட்டிஷ் ராக்கர்ஸ் கிளிஃப் ரிச்சர்ட் மற்றும் டாமி ஸ்டீல் ஆகியோருக்கு பாடல்களை எழுதுவதற்கு முன்பு அவர் பெரிய இசைக்குழுக்களுடன் பணியாற்றினார். நகைச்சுவை நடிகர் பென்னி ஹில்லுடன் பல்வேறு இரட்டை நடிப்பில் நடித்துள்ளார்.
டாமி ஸ்டீல் மற்றும் மேக் மீ அன் ஆஃபர், எக்ஸ்பிரஸ்ஸோ போங்கோ, சாங்புக் மற்றும் பாப்பி உள்ளிட்ட மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
1962-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'டாக்டர் நோ' என்கிற முதல் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கான கருப்பொருளை உருவாக்க தயாரிப்பாளர் ஆல்பர்ட் நார்மனை பணியமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

