search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalakshmi"

    • இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    • திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.



    இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைதாகியுள்ளார்.

    நேபாளி படத்தின் மூலம் பிரபலமான தமிழ் நடிகை ஜெயலட்சுமிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். #Jayalakshmi
    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. நேபாளி படத்தில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து வாட்ஸ்அப்பில் தேவையில்லாத தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.

    நீங்கள் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்களா? உங்களோடு வருவதற்கு வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள். ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும் தருவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை அனுப்பி பாலியலுக்கு அழைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் அளித்தார். அதில் தனக்கு செல்போனில் தேவை இல்லாத அழைப்புகளை விடுத்து தொல்லை கொடுக்கும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இது பற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் முருகப்பெருமான், கவியரசன் ஆகிய இருவரும் சேர்ந்து நடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    ஜெயலட்சுமியை பாலியலுக்கு அழைத்து கைதான வாலிபர்கள்.

    இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்தனர். வாடிக்கையாளர் போல பேச்சு கொடுத்த போலீசார் அண்ணாநகர் பகுதிக்கு வரவழைத்து 2 பேரையும் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி ஆவேசமாக பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் எனது செல்போனுக்கு அடுத்தடுத்து 2 எண்களில் இருந்து வாட்ஸ்- அப்பில் சில தகவல்கள் வந்தது. அதில் வெளியில் டேட்டிங் செல்லலாம் என்றும், அதற்காக எங்களிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களது ஆலோசனை பேரில்தான் போலீசில் துணிச்சலுடன் புகார் அளித்தேன். போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    இதுபோன்ற நேரங்களில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி பயப்படாமல் தைரியத்துடன் அதனை எதிர் கொள்ள வேண்டும். நடிகை என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவு செய்வது சரியல்ல. எங்களுக்கும் குடும்பம் உள்ளது. மற்ற பெண்களை போலத்தான் நாங்களும். எனவே என்னை போன்ற நடிகைகளும் இதுபோன்ற பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Jayalakshmi
    ×