என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayam Ravi"

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -1’.
    • 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

     

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

     

    இதில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, ''நல்ல படைப்பை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. தமிழ் ஊடகங்கள் மட்டுமில்லாமல், இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பொன்னியின் செல்வன் படைப்பை கொண்டாடுகிறார்கள். இன்று உலகம் டிஜிட்டல் மயமான பிறகு அனைத்தும் எளிதாக இருக்கிறது. நட்சத்திரங்களைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் விசயங்கள் எங்களை விரைவாகவும், எளிதாகவும் வந்தடைகிறது.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    உலகம் முழுவதும் அனைவரும் இந்த படைப்பை விமர்சனம் செய்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் மணிசார் தான். அவர் நாற்பது வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பை வழங்கி கலை சேவை செய்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று துல்லியமாக தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மணி சார் மற்றும் சுபாஸ்கரன் சார் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வெற்றியைக் கடந்த வாழ்த்துக்கள்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இந்த தருணத்தில் நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை அளித்துவிட்டு, இயக்குனர் மணிரத்னம் அமைதியே உருவமாக அமர்ந்திருக்கிறார். இவரை நாம் கொண்டாட வேண்டும். அவரின் கண் முன்னால், அவரை வைத்துக் கொண்டு அனைவரும் பேச வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்" என்றார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி எப்படி அந்த கதாப்பாத்திரமாக மாறினார் என்பது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் டிரைலரும் அதே நாளில் வெளியாகவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி எப்படி உருமாறினார் என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரம் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.




    இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன், அமைச்சர் துரை முருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    இப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி வெளியான படம் ‘அகிலன்’.
    • இப்படத்தை விளம்பரப்படுத்த வித்யாசமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அகிலன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி

    அகிலன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி

    இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தின் சமீபத்திய வெளியீடான 'அகிலன்' படத்தின் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர நிகழ்வை சென்னை மெரினா மாலில் நடத்தியது. அந்நிகழ்வில் 'அகிலன்' படத்தின் கதைக்கருவில் வரும் கப்பல் நங்கூரம் செயற்கையாக உருவாக்கப்பட்டு, இந்த நங்கூரத்தை குறிப்பிட்ட நேரம் தூக்கி வைத்திருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஜீ5 தளத்தின் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ஜீ5 தளத்தின் ஒரு வருட வாடிக்கையாளர் சந்தாவை வென்றுள்ளனர்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.



    இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படக்குழு புரொமோஷனுக்காக மும்பைக்கு சென்றுள்ளனர். அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி (பூங்குழலி) மற்றும் சோபிதா துதிபாலா (வானதி) இருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பூங்குழலி மற்றும் வானதியுடன் மும்பையில் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


    • ஜெயம் ரவியின் 30வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.

    அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, இறைவன், ஜெஆர்30 மற்றும் சைரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து ஜெயம் ரவியின் 32 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.



    கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 



    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.
    • இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



    'இறைவன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் 2 நிமிடம் 33 வினாடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.
    • தனி ஒருவன் 2 ப்ரோமோ வீடியோவிற்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார்.

    ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.

    இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.

    • ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’.
    • இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    இந்நிலையில், 'இறைவன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல' போன்ற வசனங்களுடன் த்ரில்லர் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், 'இறைவன்' டிரைலர் ஒரே நாளில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


    'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





    • ஜெயம் ரவியின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
    • ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார்.

    ஜெயம் ரவிக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி படத்தில் அவருடைய முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அவரின் 21 வருட திரை வாழ்க்கையில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மிரட்டலாக தோன்றியுள்ளார். ஒரு தோற்றம் அமைதி கலந்த கோபமான தோற்றத்திலும் இன்னொரு கதாபாத்திரம் இளமை துள்ளலுடன் ரொமான்ஸ் பார்வையிலும் நடித்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்று இசை வெளியீடு நடைபெற உள்ளது. 'சைரன்' படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    • கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
    • 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது.

    'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், 'கே ஜி எஃப்', 'புஷ்பா' புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

     

    'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜிவி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    'பிரதர்' குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ், "ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் 'ஜெயம்', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்', மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் 'பிரதர்' இணையும் என்பதில் சந்தேகம் இல்லை," என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்ட நிலையில் இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

    • எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம்.
    • இந்த படமும் கண்டிப்பாக வெற்றியடையும்.

    ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கி இருக்கும் படம் சைரன். அடுத்த வாரம் ரிலீசாக இருக்கும் சைரன் படத்தின் விளம்பர பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இது தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, "மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீசுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்த படமும் கண்டிப்பாக வெற்றியடையும்."

    "ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜி.வி. பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒப்புக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருத்தர் ஜி.வி. பிரகாஷ்," என்று தெரிவித்தார்.

    இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். 

    ×