search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayaprakash"

    • விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க்.
    • படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

    விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க். பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், ஜாக்கிசெராப், ஜெயபிரகாஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற ஜூலை மாதம்திரைக்கு வர இருக்கிறது. காஷ்மீர், மும்பை, சென்னையில் நடைபெறும் கதை இந்த படம்.

    கொலைச் சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வதே கொட்டேஷன் கேங் படத்தின் கதை.

    படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

    படத்தில் இருவரது கதாபாத்திரங்களும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளன.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது.

    விழாவில் சன்னி லியோன் பேசியதாவது:-

    இந்த படத்தின் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர் விவேக் கண்ணன் நினைத்து என்னை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.

    பிரியாமணியும் நானும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறோம்.

    கவர்ச்சியாக என்னை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் என்னை பார்த்து ரசிப்பார்கள். ஜாக்கி செராப்புக்கு நான் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் கண்டிப்பாக மாறும். அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    படத்தின் டிரைலர் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் நிரம்பியுள்ளது. காஷ்மீர், மும்பை மற்றும் சென்னையென பல இடங்களில் ஒளிப்பதிவாளரான அருண் பத்மனாபன் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க கேஜே வெங்கடராமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

    கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீச்சல் போட்டியின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளோம்.
    • எனது முதலாவது பதவி காலத்தில் நீச்சல் போட்டி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன்.

    சென்னை:

    இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுக்கான (2023-27) புதிய நிர்வாகிகள் அனைவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயபிரகாஷ் நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பின்னர் இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'தொடர்ந்து 2-வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது கவுரவமாகும். எனது முதலாவது பதவி காலத்தில் நீச்சல் போட்டி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன். இரு இந்திய நீச்சல் வீரர்கள் (சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ்) உயரிய தரத்தோடு தகுதி பெற்றதை பார்த்தோம். நீச்சல் போட்டியின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் நீச்சலில் உலக அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை நோக்கி பயணிப்பதாக நம்புகிறேன்' என்றார்.

    இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இதுநாள் வரை துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தலைவராக தேர்வாகி இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஆகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

    பொதுச்செயலாளராக குஜராத்தைச் சேர்ந்த சோக்ஷி மோனலும், பொருளாளராக தெலுங்கானாவை சேர்ந்த மேகலா ராமகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக பால்ராஜ் சர்மா (பஞ்சாப்), ராஜீவ் சுகுமாறன் நாயர் (கேரளா), கமலேஷ் நானாவதி (குஜராத்), பியூஷ் சர்மா (மத்தியபிரதேசம்), அனில் வியாஸ் (ராஜஸ்தான்), இணை செயலாளர்களாக ஆர்.பி.பாண்டே (பீகார்), ரவின்கபூர்(உத்தரபிரதேசம்), மோகன் சதீஷ்குமார் (கர்நாடகா), அணில் காத்ரி (அரியானா) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பதவி காலம் 4 ஆண்டுகளாகும்.

    புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயபிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட இந்திய நீச்சல் சம்மேளனத்திற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச நீச்சல் போட்டிகளில் ‘பி’ பிரிவு தகுதி போட்டிகளுக்கு தேர்வு பெறுவதே இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கடினமாக இருந்தது. தற்போது நீச்சல் சம்மேளனம் மேற்கொண்டுவரும் பல்வேறு பயிற்சி திட்டங்களால் பெரும்பாலோர் எளிதில் தகுதி பெற்று வருகின்றனர். இதே போல் ‘ஏ’ பிரிவு தகுதி போட்டிகளுக்கும் தேர்வு பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    தொழில்முறை விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் அரசு சார்பில் மாவட்டம் தோறும் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டு நல்ல கட்டமைப்பு வசதி உள்ளது. தமிழகத்தில் இருப்பதை போல மற்ற மாநிலங்களிலும் நீச்சல் குளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புனே, பெங்களூரு போன்ற இடங்களில் நீச்சல் அகாடமிகள் உருவாக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழகத்திலும் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் இருந்து 5 முதல் 10 பேர் வரை 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது இலக்காகும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவும் நீச்சல் போட்டியில் சிறந்த நாடு தான் என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம்.

    இவ்வாறு ஜெயபிரகாஷ் கூறினார்.
    ×