என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jeep"

    ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jeepcompass



    ஜீப் இந்தியா நிறுவனம் புதிய காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய பிளாக் பேக் எடிஷன் டாப் என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. 

    பிளாக் பேக் எடிஷனில் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனத்திற்கு காம்பஸ் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் விற்பனையை மேலும் அதிகப்படுத்த இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    வெளிப்புறத்தில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷனில் பிளாக் நிற ORVMகள், அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடலில் டாப்-என்ட் வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரையும் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.



    வோக்கல் மைன், மினிமல் கிரே மற்றும் மக்னீசியோ கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் உள்புறம் முற்றிலும் புதிய கருப்பு நிற தீம் கொண்டுள்ளது. இது ஜீப் காம்பஸ் ஸ்டான்டர்டு வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் டூயல் டோன் தீமிற்கு மாற்றாக அமைந்துள்ளது. இதன் கேபினை பொருத்த வரை ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சென்ட்டர் கன்சோல் மற்றும் கதவுகளில் க்ரோம் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பிளாக் பேக் எடிஷனில் 2-லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு ஸ்டான்டர்டு மாடலை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிஷன் விலை ரூ.20.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்ப்பூர் பகுதியில் பிரசவ வலியுடன் ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு ஊழியர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் சென்ற ஜீப்பிலேயே குழந்தை பெற்றார். #chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டம், பகிச்சா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கடந்த 20-ம் தேதி பிரசவ வலியுடன் பெண் ஒருவரை அனுமதிக்க உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை சிகிச்சைக்காக அனுமதிக்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால், வேறு வழியின்றி அவர்கள் வந்த ஜீப்பிலேயே அந்த பெண்ணுக்கு அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு அந்த பெண்ணையும் குழந்தையையும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சிகிச்சைக்காக அந்த ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.

    ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #chhattisgarh
    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Accident #MadhyaPradesh
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் இன்று அதிகாலை டிராக்டர் ஒன்று ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளாதாகவும், மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிகாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Accident #MadhyaPradesh
    காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப் தார் மாடலை அருங்காட்சியகத்தில் வைக்க மஹேந்திரா முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மஹேந்திரா நிறுவனத்தின் தார் ஆஃப் ரோடர் மாடலுக்கு காலா திரைப்படம் சிறப்பான விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில், காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் காரினை மஹேந்திரா நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. 

    இதற்கென ரஜினிகாந்த் பயன்படுத்திய காரினை மஹேந்திரா நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதனை ஆனந்த் மஹேந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினி மஹேந்திரா தார் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தினசரி நாளேடுகளில் விளம்பரம் செய்துள்ளது.



    மஹேந்திரா தார் ஆஃப்-ரோடர் ஜீப் DI மற்றும் CRDe என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் DI வேரியன்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் என பொருள்படுகிறது, இந்த மாடல் ஊரகம் மற்றும் ஊராட்சி சார்ந்த நகர பகுதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதனை மக்கள் பயன்பாடு, விவசாய பணிகள் மற்றும் பொது பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றதாக இருக்கிறது.

    தார் ஆஃப் ரோடர் DI வேரியன்ட் 8 பேர் அமரக்கூடியதாகும். இந்த ஜீப் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் M2DICR டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இது 63 பிஹெச்பி பவர், 180 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதில் பவர் ஸ்டீரிங் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    மஹேந்திரா தார் DI மாடலில் ரியர் வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் அனைத்து வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.



    தார் CRDe வேரியன்ட் நகரவாசிகளுக்கு ஏற்ற வகையில், கிளாசிக் தோற்றம் கொண்ட ஜீப் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையிலான இன்டீரியர், சீட் மற்றும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கபக்பட்டுள்ளது. இந்த மாடலில் 4-வீல் டிரைவ் ஸ்டேன்டர்டு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    இத்துடன் CRDe மாடலில் ஏசி வசதி, பவர் ஸ்டீரிங் உள்ளிட்டவை ஸ்டேன்டர்டு ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது இதன் 2.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் 105 பிஹெச்பி பவர், 247 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடலிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8-பேர் அமரக்கூடிய சீட்டிங், DI வேரியன்ட்-ஐ விட சிறப்பான இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. 

    தலைசிறந்த அம்சங்களை போன்றே மஹேந்திரா தார் CRDe வேரியன்ட் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×