என் மலர்
நீங்கள் தேடியது "Jegan"
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடைசி நாளில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். #Jyothika #Revathi
ஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதில் கல்யாண் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகி இருக்கும் படத்தில் ஜோதிகாவுடன் ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
And it is a wrap for the #Jyotika & #Revathi starrer #ProductionNo11 in just 35 days! #ProductionNo11WrapsUp@Suriya_offl@DirKalyan#Jyotika#Revathi@iYogiBabu#MansoorAliKhan#AnandRaj@anandakumardop@Composer_Vishal@2D_ENTPVTLTD@rajsekarpandian@SF2_officialpic.twitter.com/67BNqSxS3y
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 22, 2019
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.
ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Jyothika #Revathi #Suriya
தமிழ் சினிமாவில் வாரத்திற்கு 4 முதல் 5 படங்கள் ரிலீசாகி வரும் நிலையில், காமெடியன்கள் ஹீரோவாக படையெடுக்கும் நிலையில், வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடியும், காமெடியன்களும் இல்லை என்ற நிலை வரலாம். #YogiBabu #RJBalaji
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 படங்களுக்கும் மேல் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் கால்வாசி கூட வெற்றி பெறுவதில்லை. காரணம் குடும்ப ரசிகர்களை இழந்தது தான். குடும்ப ரசிகர்களுக்கு படங்களில் நகைச்சுவை இருப்பது அவசியம். மனம் விட்டு சிரித்து ரசித்து மகிழத் தான் விரும்புவார்கள். ஆனால் தமிழ் சினிமா காமெடிக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறது.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் இப்போது ஆள் இல்லை. காரணம் காமெடியன்களுக்கு ஹீரோ ஆசையை உண்டாக்கி ஹீரோவாக மாற்றிவிடுகிறார்கள். சந்தானமும் வடிவேலுவும் ஹீரோவாக மாறிவிட்டார்கள். இந்த வரிசையில் இன்னும் சில காமெடியன்கள் இணைய இருக்கிறார்கள்.

காமெடி நடிகர் கருணாகரன் பொது நலன் கருதி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காமெடியனாக சில படங்களில் நடித்த ஜெகன் ’இன்னும் கல்யாணம் ஆகல’ என்ற படத்தில் ஹீரோவாகி விட்டார். நயன் தாராவுடன் யோகி பாபு நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவுக்கு நயனை காதலிக்கும் வேடம். இந்த படத்தில் ஹீரோ இல்லை. இப்போது ஆர்ஜே பாலாஜியும் எல்கேஜி என்னும் படத்தில் ஹீரோவாகி விட்டார். அடுத்து சூரி, சதீஷும் ஹீரோவாக களம் இறங்க யோசித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் காமெடியும் இல்லை. காமெடியன்களும் இல்லை என்ற நிலை வரப்போகிறது. #YogiBabu #RJBalaji