என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jithu madhavan"

    • இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஜித்து மாதவன் 2023 ஆம் ஆண்டு ரோமான்சம் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சௌபின் ஷாஹிர் , அர்ஜுன் அசோகன் , சஜின் கோபு போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். 70 கோடி வசூலை அள்ளியது இத்திரைப்படம்.

    இந்நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் ஆவேஷம் படத்தை இயக்கியுள்ளார் இதில் ஃபஹத் ஃபாசில், சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகவுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மாறுப்பட்ட வேடமாக காணப்படுகிறார். படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியான நிலையில் இப்பொழுது அப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலின் பெயர் இல்லுமினாட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம்.
    • ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

    2024-ம் ஆண்டில் மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேசம் ஆகிய படங்கள் மலையாளம் மற்றும் தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை டைரக்டர் சிதம்பரமும் ஆவேசம் படத்தை டைரக்டர் ஜித்து மாதவனும் இயக்கினர்.

    இதில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

    இதேபோல ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படமும் பெரும் அளவில் இளைஞர்களை கவர்ந்த படமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் டைரக்டர் சிதம்பரம் மற்றும் ஜித்து மாதவன் இணைந்து புதிய மலையாள படம் ஒன்றை இயக்க உள்ளனர். ஜித்து மாதவன் கதையில் இந்த படத்தை சிதம்பரம் டைரக்ட் செய்கிறார்.

    இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம், எடிட்டராக விவேக் ஹர்சன், ஒளிப்பதிவாளராக ஷைஜு காலித் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த 2 வெற்றி இயக்குனரும் இணைந்து செயல்படுவதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

    ×