என் மலர்
நீங்கள் தேடியது "jiyen krishna kumar"
- இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரன் பேபி ரன்
இந்நிலையில், 'ரன் பேபி ரன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.