என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JK Ritish"

    ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #JKRitish #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், எனது நண்பருமான ஜே.கே.ரித்தீஷ், இளம் வயதில் திடீரென்று மறைந்துவிட்டார் என்ற துயர செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.



    கருணாநிதியிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய ஜே.கே.ரித்தீஷ், தி.மு.க.வில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர்.

    நாளடைவில் வேறு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டாலும், தனது பழைய நட்பை மறந்துவிடாமல் தொடர்ந்து பாசத்துடன் பழகியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #JKRitish #MKStalin
    கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `எல்கேஜி' படத்தின் முன்னோட்டம். #LKG #RJBalaji #PriyaAnand
    வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `எல்கேஜி'.

    ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - விது அய்யணா, படத்தொகுப்பு - அந்தோணி, கலை இயக்குனர் - டி.பாலசுப்ரமணியன், சண்டைப்பயிற்சி - சில்வா, பாடல்கள் - பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி சிங், திவ்யா நாகராஜன், தயாரிப்பு நிர்வாகம் - கே.எஸ்.மயில்வாகனம், ஒலி வடிவமைப்பாளர் - டி.உதயகுமார், தயாரிப்பாளர் - டாக்டர் ஐசரி கே.கணேஷ், எழுத்து - ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நண்பர்கள், இயக்கம் - கே.ஆர்.பிரபு



    படம் பற்றி பிரியா ஆனந்த் பேசும் போது,

    இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.

    பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் என்றார்.

    எல்கேஜி வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

    எல்கேஜி டிரைலர்:

    ×