என் மலர்
நீங்கள் தேடியது "John Vijay"
கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள சின்மயி, நடிகர்கள் கல்யாண் மற்றும் ஜான் விஜய் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். #MeToo #Timesup
பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு மிடூ மூலம் அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள்.
இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் பெயர் குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை அனுப்பி உள்ளார்.
அதை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:-
“நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.
Heartbreaking story.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
Dance Master Kalyan.
Your #TimesUPpic.twitter.com/1BbWgVI2tc
எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டுமானால் அவரோடு படுக்க வேண்டும் என்றார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபோல் கபாலி, சாமி-2, ராவணன், கோ உள்பட பல படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகர் ஜான் விஜய் மீது ஒரு பெண் தெரிவித்துள்ள பாலியல் புகாரை பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு பண்ணை வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் ஜான் விஜய் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அவரை மற்ற பெண்கள் துணையுடன் விரட்டினேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
விருந்தில் தடை செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருள் தாராளமாக பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ஜான் விஜய் மறுத்துள்ளார். இந்த புகார்கள் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. #MeToo #Timesup #Kalyan #JohnVijay
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் விமர்சனம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti
நாயகன் அதர்வாவும், நாயகி மிஷ்டியும் பிரிந்துவிடுகின்றனர். மிஷ்டியை பிரிந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் அதர்வாவை தேற்ற முயற்சி செய்யும் அவரது நண்பன் கருணாகரன், மிஷ்டியை மறப்பதற்காக அதர்வாவை மற்றொரு பெண்ணுடன் கோர்த்து விடுகிறார். முதலில் அதற்கு ஆர்வம் காட்டாத அதர்வா பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார்.
இதையடுத்து விலைமாதுவான அனைகா சோதியை, அதர்வா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் கருணாகரன். இந்த நிலையில், அதர்வாவுக்கு மிஷ்டி போன் செய்து தான் அடுத்த நாள் காலை வீட்டிற்கு வருவதாகவும், இருவரும் சேர்வது குறித்து பேச தனது மாமாவும் தன்னுடன் வருவார் என்றும் கூறுகிறாள். மிஷ்டி வருவதற்குள் அனைகாவை வெளியே அனுப்பி விட அதர்வா முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், அவரது குடியிருப்பில் இருக்கும் தேவதர்ஷினி தனது மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று அதர்வாவின் உதவியை கேட்கிறார். இதையடுத்து அனைகாவை தனது வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு அதர்வா மருத்துவமனைக்கு செல்கிறார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது, அனைகா வாயில் இரத்தத்துடன் செத்துக் கிடக்க அதிர்ச்சியடையும் அதர்வா கருணாகரனுக்கு போன் செய்கிறார்.
இந்த நிலையில், அனைகாவுக்கு போன் வர அதை எடுத்து பேசும் போது, அனைகா கேரளாவை சேர்ந்தவள் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து மிஷ்டிக்கு போன் செய்து அவளை இன்னொரு நாள் வரும்படியும், அனைகாவின் உடலுக்கு துணையாக கருணாகரனையும் வைத்து விட்டு, அனைகாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க அதர்வா கேரளா செல்கிறார்.

அங்கு அவருக்கு நிறைய இடைஞ்சல்கள் வருகிறது. அதையெல்லாம் முறியடித்து அனைகா மரணத்தில் இருக்கும் மர்மத்தை அதர்வா கண்டுபிடித்தாரா? மிஷ்டியுடன் மீண்டும் இணைந்தாரா? அனைகா உடலுக்கு காவலுக்கு இருந்த கருணாகரன் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பானா காத்தாடி படத்திற்கு பிறகு மீண்டும் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ள அதர்வா, இந்த படத்தில் முற்றுலும் மாறுபட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு துணையாக கருணாகரனும் காமெடியில் கலக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் கருணாகரனின் காமெடிக்கு சிரிப்பொலி கேட்கிறது.

மிஷ்டிக்கு தமிழில் இது தான் முதல் படம் என்றாலும், மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருப்பதுடன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனைகா சோதியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், படத்தில் முக்கிய திருப்பமாக அவரது கதாபாத்திரம் பார்க்கப்படுகிறது. ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பானா காத்தாடி படத்திற்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். காதல், காமெடி, கிளுகிளுப்பு, கவர்ச்சி, த்ரில்லர் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார். எனினும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில் தனது பழைய ஃபார்முடன் மிரட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `செம போத ஆகாதே' மயக்கம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் முன்னோட்டம். #SemmaBothaAagathey #Atharvaa
கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அதர்வா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `செம போத ஆகாதே'.
அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மிஷ்டி, அனைகா சோதி நாயகிகளாக நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசை - யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டிங் - பிரவீன் கே.எல், பாடல்கள் - பத்ரி வெங்கடேஷ், ஜி.ரோகேஷ், கே.ஜி.ரஞ்சித், நிரஞ்சன் பாரதி, கலை இயக்குநர் - எஸ்.எஸ்.மூர்த்தி, உடை வடிவமைப்பாளர் - ஷோபா முரளி, சண்டை பயிற்சியாளர் - திலீப் சுப்பராயன், தயாரிப்பு - கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், வசனம் - ஜி.ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, இயக்கம் - பத்ரி வெங்கடேஷ்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அதர்வா பேசும் போது,
“ படவிழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.
படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். இப்போது பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது. இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.”
படம் ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #SemmaBothaAagathey #Atharvaa
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #SemmaBothaAagathey #Atharvaa
அதர்வா நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர், தள்ளிப்போய் வந்த நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி படம் வருகிற ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.
`பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #SemmaBothaAagathey #Atharvaa
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தயாரான படங்களுக்கு வழிவிடும் வகையில், செம போத ஆகாதே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்க்கிறது.

பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக இருக்கிறது. #SemmaBothaAagathey #Atharvaa
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் புதிய டிரைலர் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக இருப்பதாக நடிகர் அதர்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa