என் மலர்
நீங்கள் தேடியது "Johnny Trailer"
வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ஜானி படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #Johnny #Prashanth #SanchitaShetty
90-களில் முக்கியமான கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜானி. இயக்குனர் ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரசாந்துடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் தியாகராஜன் தயாரித்துள்ளார்.

ஜானி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை பிரசாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வரை படத்தின் டிரைலரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.
கள்ள நோட்டை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக ஜானி உருவாகி இருப்பதை டிரெய்லரை பார்க்கும்போது அறிய முடிகிறது. 2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’. போலீஸ் அதிகாரிகள், காணாமல் போன பணத்தை தேடி போகும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ஜானி. #Johnny #Prashanth #SanchitaShetty
படத்தின் டிரைலரை பார்க்க: