search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "joint press meet"

    டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முப்படை தளபதிகள், இந்தியா எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். #IAF #IndianAirForce #Pakistan #Abhinandan #RGKapoor #DSGujral #SurendraSinghMahal
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல் மற்றும் தல்பீர் சிங் ஆகியோர் இன்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    விமான தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பல தவறான தகவல்களை கூறிவருகிறது. பிப்ரவரி 27ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்தோம்.

    காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.



    இரு இந்திய விமானிகளை கைது செய்ததாக பாகிஸ்தான் பொய் கூறியது. ஆளில்லா இடங்களில் தான் தாக்குதல் நடத்தியதாக பாக். கூறியது, ஆனால் அவர்கள் இந்திய தளவாடங்களை குறிவைத்து தான் தாக்கியுள்ளனர். மேலும் பாக். எஃப்-16 ரக விமானத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூறியது. ஆனால் அதைத்தான் நாம் சுட்டு வீழ்த்தினோம். எல்லையில் உள்ள அனைத்துப் படைகளும் தயார் நிலையில் உள்ளது.

    பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. விமானி அபினந்தன் விடுவிக்கப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சி..

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்திய படைகள் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானத்தின் பாகங்களை முப்படை அதிகாரிகள் காட்டினர். #IAF #IndianAirForce #Pakistan #Abhinandan #RGKapoor #DSGujral #SurendraSinghMahal
    ×