என் மலர்
நீங்கள் தேடியது "jonita gandhi"
- நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்சும், மும்பை இந்தியன்சும் மோதுகின்றனர்.
- இதில் வெற்றி பெறும் அணி 28-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. தோல்வி அடைந்தாலும் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த வகையில் குஜராத்துக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றை அடைந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்சும், மும்பை இந்தியன்சும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் அணி 28-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும்.
இந்நிலையில், ஐ.பி.எல். நிறைவு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், பாடகி ஜோனிடா காந்தி பாடல் பாடவுள்ளார். இதனை ஐ.பி.எல். குழு தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.
? ????-??????? ???????! ⭐️
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
The #TATAIPL closing ceremony at the iconic Narendra Modi Stadium ?️ has memorable performances written all over it ?
Prepare to be ?????? and get ready to be mesmerised by the tunes of @VivianDivine & @jonitamusic ??… pic.twitter.com/npVQRd6OX2
- தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
- விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், ஜோனிதா காந்தி, ஆண்ட்ரியா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
வி.ஐ.டி சென்னையில் வைப்ரன்ஸ் - VIBRANCE 2024 சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், பின்னணி பாடகி ஆண்ட்ரியா, பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
விஐடி சென்னையில் நடைபெறும் சர்வதேச அளவிலான கலை திருவிழாவான வைப்ரஸின் லோகோவினை விஐடி துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் வெளியிட்டார். கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், மாணவர் நல இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர் விசுவநாதன், "தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா மார்ச் 6,7,8,9-ம் தேதிகளில் விஐடி சென்னையில் நடைபெறுகிறது.
இதில், ஐ.ஐ.டி. என்.ஐ டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், ஜப்பான், பிரேசில், இலங்கை, மியான்மர், எத்தியோப்பியா, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

200 வகையிலான கலை போட்டிகள், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 வகையான விளையாட்டுப் போட்டிகள் என மொத்தம் 250 போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தப் பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.
முக்கிய நிகழ்வாக வைப்ரன்ஸ் முதல் நாள் நடைபெறும் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார். பிரபல பின்னணி பாடகர் ஷ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டாம் நாள் (மார்ச் 7) பிரபல பாடகி ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

மூன்றாம் நாள்(மார்ச் 8) பிரிபல பாடகி ஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி, புகழ் பெற்ற ஷ்ரே கண்ணா குழுவின் நடனமும் நடைபெறுகிறது. வைப்ரன்ஸ் நிறைவு விழாவில் (மார்ச் 9) பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் அவர் தெரிவித்தார்.
- தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்.
- இவரை திருமணம் செய்துக்கொள்ள பிரபல பாடகி விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக இசையமைப்பாளர் அனிருத் திருமணம் குறித்து பலவேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவர் பிரபல நடிகையை காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. ஆனால் இரு தரப்பிலும் அதை மறுத்து விட்டனர். இப்போது பிரபல பாடகி ஜோனிடா காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிலளித்திருக்கிறார்.

அனிருத் - ஜோனிடா காந்தி
அவரிடம் சூர்யா, ரண்பீர் சிங், அனிருத் இந்த மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த ஜோனிடா சூர்யா, ரண்பீர் சிங் இருவரும் திருமணம் ஆனவர்கள். அதனால் நான் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று ஜாலியாக பதிலளித்திருக்கிறார்.