என் மலர்
நீங்கள் தேடியது "Julie"
பிக்பாஸ் படம் மூலம் புகழ் பெற்ற ஜூலி, தற்போது நடித்து வரும் ‘அம்மன் தாயி’ படத்தில் நடித்து வருவதால், அவரை ஊர்மக்கள் அம்மனாக வழிபட்டிருக்கிறார்கள். #Julie
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. சர்ச்சையான பெண்ணாக அறியப்பட்ட ஜூலிக்கு சினிமாவிலும் சர்ச்சையான வேடங்களே வருகின்றன.
நீட் தேர்வுக்கு பலியான அனிதாவின் வாழ்க்கை படத்தில் அனிதாவாக நடிப்பதற்கே எதிர்ப்புகள் உள்ள நிலையில் ஒருபடத்தில் அம்மனாக நடித்து முடித்து இருக்கிறார். ’அம்மன் தாயி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர்கள் இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் சந்திரஹாசன்.
மகேஸ்வரினிடம் ஜூலியை அம்மனாக நடிக்க வைத்தது பற்றி கேட்டோம் ‘அம்மனாக மட்டும் அல்லாது சாதாரண பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜூலி. அம்மனாக நடித்தபோது ஜூலி வழக்கமான ஜூலியாக இல்லை. வழக்கத்துக்கு மாறாக அமைதியாக சாமி வந்ததுபோலவே இருந்தார். அம்மனாக நடித்தபோது விரதம் இருந்து அந்த அலங்காரத்திலேயே இருந்தார்.

ஓட்டலில் தங்காமல் கோவிலிலேயே தங்கினார். மதுரை பக்கத்தில் வடக்கம்பட்டி என்னும் ஊரில் எடுத்தோம். அந்த ஊர் மக்கள் ஜூலியை அம்மனாகவே வழிபட்டனர். படத்தில் இடம்பெறும் முளைப்பாரி திருவிழாவும் உண்மையிலேயே நடத்தப்பட்டது’ என்றார்.
இந்த படத்தில் கதாநாயகனாக அன்பு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் நடிக்கிறார். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த ஜூலி தற்போது சினிமாவில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Kamalahaasan #Julie
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜுலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பரபரப்பானார். தொடக்கத்தில் ஜுலி மீது இருந்த நல்ல பெயர் எல்லாம் தலைகீழாக மாறியது.
ஜுலியை வளர்த்த சமூக வலைதளங்களே அவரை காட்டமாக விமர்சிக்கத் தொடங்கியது. டிவி காம்பயரிங், சினிமா என்று அடுத்தகட்ட முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். திடீரென்று நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் ஜுலி வெளியிட்டுள்ள வீடியோவில் தான் விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு பற்றியெல்லாம் சொல்லிவிட்டு தான் விரைவில் ஒன்றை தொடங்க இருப்பதாக சொல்லி முடிக்கிறார். அவரது உதட்டசைவை வைத்து அது அரசியல் கட்சி தான் என்று அவரை கிண்டலடித்து வருகிறார்கள். நாம் விசாரித்த வகையில் ஜுலிக்கு அரசியல் ஆசை இருக்கிறது.

ஆனால் தனிக் கட்சி தொடங்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார். கமல் கட்சியில் சேரத் தான் முயற்சிக்கிறார். இது ஏதோ இயக்கத்துக்கான விளம்பரம் போல உள்ளது என்கிறார்கள். #Kamalahaasan #Julie