search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Justice Dinesh Maheshwari"

    உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் இன்று பதவியேற்றனர். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    புதுடெல்லி:

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    புதிய நீதிபதிகள் நியமனத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.



    இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக  இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    ×