என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "justice investigation"
தருமபுரி:
தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிட்லிங் பகுதியில் 16 வயதான சிறுமியை அந்த பகுதியை சேர்நத சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து உள்ளார். கடந்த 5-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற்ற சம்பவத்துக்கு பிறகு மறுநாள் (6-ந் தேதி) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரால் கொடுக்கப்பட்ட மனுவை போலீசார் வாங்க மறுத்தது ஏன்? அன்றைக்கே நடவடிக்கை தொடங்கி இருந்தால் மாணவி உயிரிழப்பை தவிர்த்து இருக்க முடியும். இது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
7-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 3 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகுதான் 10-ந் தேதி காலை உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #dharmapurigirlstudent #girlmolested