என் மலர்
நீங்கள் தேடியது "K Anbazhagan"
- கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார்.
- என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
"குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனிவரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்.
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சளித்தொல்லை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சில தினங்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனை சந்தித்தார். அப்போது அவரது உடல் நிலை குறித்து கேட்டு அறிந்தார்.
அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் பெற்று வருகிறார். விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். #MKStalin #KAnbazhagan
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு இன்று 97-வது பிறந்த நாள்.
இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வேண்டுகோளை வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனால் அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் செல்லவில்லை.
அன்பழகன் பேச முடியாத அளவுக்கு தொண்டையில் கரகரப்பு உள்ளதால் தொலைபேசியில் யாரும் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுக்க கூடாது என்பதற்காக அவரது மகன் தனது வீட்டுக்கு அன்பழகனை அழைத்து சென்று விட்டார்.
இதனால் கட்சி நிர்வாகிகள் யாரும் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை. #DMK #KAnbazhagan #MKStalin