search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K Bhagyaraj"

    • ராம் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் மனிதன்'.
    • இப்படத்திற்கு வேணு சங்கர், தேவ் ஜி இசையமைக்கின்றனர்.

    இயக்குனர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் மனிதன்'. இந்த படத்தில் இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா, ரிஷிகாந்த், ராம்தேவ் ராஜகோபாலன், மதுரை ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    இப்படத்திற்கு வேணு சங்கர், தேவ் ஜி இசையமைக்கின்றனர். இதன் மூலம் இவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி.அம்ரிஷ் என்ற புதுமுகம் கவனிக்கிறார். ராம் தேவ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இணை தயாரிப்பாளராக டாக்டர்.எம் . ராஜகோபாலன், டாக்டர்.டி. சாந்தி ராஜகோபாலன், டாக்டர்.பி அழகுராஜா, மதுரை. சி . ஏ.ஞானோதயா ஆகியோர் இணைந்துள்ளனர்.


    மூன்றாம் மனிதன் போஸ்டர்

    சஸ்பென்ஸ்  த்ரில்லருடன் உருவாகும் இப்படத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் அலசப்பட்டிருக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல்,  சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. 

    இந்நிலையில், 'மூன்றாம் மனிதன்' திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை பிரபல இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன், இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர்.

    • இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் 'என்னை மாற்றும் காதலே' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'என்னை மாற்றும் காதலே'. இந்த படத்தில் விஷ்வா புதுமுக நடிகர் கார்த்திகேயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஹரிதிகா சீனிவாஸ் நடித்திருக்கிறார். மேலும், கே.பாக்யராஜ், ஆம்னி, ஜெயப்பிரகாஷ், அலி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கே. பாக்யராஜ்

    என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் கே. பாக்யராஜ் கூறியதாவது, "எதைப் பாத்தாலும் ரெட் ஜெயண்ட். அதை தவிர வேறு யாரும் கிடையாது. எல்லா படமும் அவர்கள் தான் வளைச்சிப் போடுகிறார்கள். அப்படி கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் ரெட் ஜெயண்ட் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். எனக்கு தெரிந்து அதுதான் உண்மை.

    என்னிடம் பல பேர் வந்து ரெட் ஜெயண்ட் உதயநிதி சாரை படம் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். அந்த பேனர் இருந்தாலே படத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் கூட்டம் வந்துவிடும். படம் நல்லபடியா வந்து விடும். அந்த ஒரு நம்பிக்கையோட எல்லாரும் அவர்களிடம் வரிசையில் நிற்கிறார்கள்" என்று கூறினார்.

    • தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இயக்குனர் பாக்யராஜ்.
    • இவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த இயக்குனர் பாக்யராஜுக்கு, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும், தேர்தல் குறித்தும் பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தினுடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.


    பாக்யராஜ்

    காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்துள்ளீர்கள். சங்க சட்டவிதிகளுக்கு முரணாக இதை செய்து இருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.


    பாக்யராஜ்

    இதுகுறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களை சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    பாக்யராஜ்

    இந்நிலையில், புதிதாக வந்த நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்த காரணத்திற்காக இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி பா.விஜய் இயக்கி, நடித்திருக்கும் `ஆருத்ரா' படத்தின் விமர்சனம். #AaruthraReview #PaVijay
    ஞானசம்பந்தம், பா.விஜய் இணைந்து சிற்பம் உள்ளிட்ட கலைப்பொருட்களை செய்து விற்கும் கடை வைத்திருக்கிறார்கள். அத்துடன் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

    இதற்கிடையே சமூகத்தில் சில பெரிய மனிதர்கள் கடத்தப்பட்டு வேறு மாநிலங்களில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகள் குறித்து விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜ், காவல்துறையால் நியமிக்கப்படுகிறார். அவரது உதவியாளராக மொட்டை ராஜேந்திரன் வருகிறார். விசாரணையில் அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் பா.விஜய் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. அவரை கைது செய்து விசாரிக்கையில் அதற்கான காரணங்கள் தெரிய வருகிறது. 



    அதன்படி பா.விஜய் ஏன் குற்றவாளி ஆனார்? சமூகத்தின் முக்கிய மனிதர்களை கொலை செய்வது ஏன்? அவர் குடும்பம் என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    சிறுமிகளை சீரழிக்கும் சில மனித மிருகங்களை அழிக்க கதாநாயகன் எடுக்கும் அவதாரமே ஆருத்ரா. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கும் அவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கும் தர வேண்டிய தண்டனை என்ன? என்பதை கூறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். பா.விஜய் படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தாங்கி இருக்கிறார். நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தின் மீதும், தங்கை மீதும் பாசம் காட்டும்போதும், சிவாவாக வில்லன்களிடம் ஆவேசம் காட்டும்போதும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 



    ரொமான்ஸ் காட்சி இல்லாமல் திரைக்கதை அமைத்தது சாமர்த்தியத்தை காட்டுகிறது. இருப்பினும் திரைக்கதை, படத்தொகுப்பில்  கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையை ஆங்காங்கே பாதியில் விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தக்‌ஷிதா, சஞ்சனா சிங், சோனி சரிஷ்டா என்று 3 கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்குமே பெரிய வேலை இல்லை. சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான கதையில் பெண்கள் முகம் சுளிக்கும் சில வசனங்களை தவிர்த்து இருக்கலாம். முதல் பாதி கிரைம் திரில்லராகவும் இரண்டாம் பாதி குடும்ப படமாகவும் இருக்கிறது. அழுத்தமான வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கின்றன.



    தனியார் துப்பறியும் நிபுணராக பாக்கியராஜ் தனது பாணியில் கதையை கலகலப்பாக நகர்த்துவதோடு, முக்கிய திருப்பத்துக்கும் உதவுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மீரா கிருஷ்ணன், ஞானசம்பந்தன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

    வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `ஆருத்ரா' தேவையான தரிசனமே. #AaruthraReview #PaVijay

    தமிழ், மலையாள மொழிகளில் பிரபல நாயகியான இனியாவின் தங்கை தாரா, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். #Thara
    ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. 

    முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியிருக்கும் இந்த படத்தை ரசாக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா நாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். 

    கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.



    இந்த படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில், “ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம். இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான். படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.” என்று கூறினார்.

    மேலும், “தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.” என்று அக்கா இனியா அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தார். #Kilambitaangayaa Kilambitaangayaa #Thara
    ×