search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaala"

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    இந்தி படமான கேங்ஸ் ஆப் வசிபூர் படத்தில் அறிமுகமான ஹூமா குரேஷி அதனைத் தொடர்ந்து ஜாலி எல்.எல்.பி, தீத் இஷ்கியா போன்ற முக்கியமான படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களின் பிரதான நடிகையானார். 

    பின்னர், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி ஜரினாவாக ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து தீபா மேத்தா இயக்கிய சர்வதேச படமான லைலா என்ற வெப் சீரிசில் சித்தார்த்துடன் நடித்தார். 



    இந்த நிலையில் ஹாலிவுட்டில் மற்றொரு புதிய படத்திலும் ஹூமா குரேஷி முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஜோம்பி வகை படத்தில் டேவ் படிஸ்டாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஹூமா குரேஷி. இப்படத்தை 300, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், ஜஸ்டிஸ் லீக் போன்ற பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜாக் ஸிட்னர் இயக்கவுள்ளார்.
    அமெரிக்காவில் நடைபெறும் தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழாவில் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களும், கக்கூஸ் என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. #PariyerumPerumal #Kaala #Kakkoos
    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரும் 23, 24-ந் தேதிகளில் முதலாவது ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ நடைபெற இருக்கிறது.

    சர்வதேச அளவில் வெளியான தலித் சமூகம் சார்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

    இதில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தமிழ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சாய்ரத், ஃபான்றி படங்களை இயக்கிய மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் இந்தியாவில் இருந்து கவுரவிக்கப்படுகிறார்கள்.

    தமிழில் வெளியான காலா, பரியேறும் பெருமாள் படங்களும், கக்கூஸ் ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கின்றன. மலையாளத்தில் இருந்து ‘பபிலியோ புத்தா’ திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில், ‘மாசான்’, ‘ஃபேண்ட்ரி’, ‘போலே இந்தியா ஜெய் பீம்‘ ஆகிய திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளன.

    ‘காலா’ திரைப்படத்தில் தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட சாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள் அப்படியே முன்வைக்கப்பட்டன.



    காலா படத்தை இயக்கிய ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து இருந்தார்.

    இத்திரைப்படங்களுக்கு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ கவுரவம் வழங்கியுள்ளது. மலம் அள்ளும் தொழில் பற்றி திவ்யபாரதி இயக்கத்தில் ‘கக்கூஸ்’ தமிழ் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ‘வி ஹேவ் நாட் கம் ஹியர் டூ டை’, ‘தி பேட்டில் ஆப் பீமா கோரேகான்’ உள்ளிட்ட மேலும் பல ஆவணப்படங்களும் இங்கு திரையிடப்பட உள்ளன. இதுதான் முதலாவது ஆண்டு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா’ ஆகும்.

    இதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான் சட்ட மேதை அம்பேத்கர், 1927-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பி.எச்டி பட்டம் பெற்றார். 1952-ம் ஆண்டு, அம்பேத்கருக்கு இந்த பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கி கவுரவித்தது. #PariyerumPerumal #Kaala #Kakkoos #USInternationalFilmFestival

    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல், காலா மற்றும் பாகுபலி படத்தை விட அதிகமாக வசூலித்திருக்கிறது. #Sarkar
    விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் அரசியல் சூழ்நிலையை பற்றியும், கள்ள ஓட்டு பற்றியும் சமூக அக்கறையுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

    ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி இருக்கிறது. சென்னையில் ரூ.2.37 லட்சம் முதல் நாள் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூல் ரஜினியின் காலா, பிரம்மாண்ட படமான பாகுபலி கலெக்‌ஷனை முறியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களின் வசூலையும் மிஞ்சியிருக்கிறது.



    சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தின் 100வது நாளை அமெரிக்க ரசிகர்கள் கறி விருந்து வைத்து கொண்டாடி இருக்கிறார்கள். #Kaala #Rajini
    ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் 100வது நாளை அமெரிக்க ரஜினிகாந்த் ரசிகர்கள் விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்கள். 

    கிடாக்கறி, கோழிக்கறி, பாயசம் என பலவகை உணவுகளுடன் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ‘காலா கறி விருந்து’ டல்லாஸ் மாநகரின் இர்விங் ஜெபர்சன் பார்க்கில் நடைபெற்றுள்ளது.



    இந்த பார்க்கின் பிக்னிக் திடலை, நகர நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் பேன்ஸ், (யு.எஸ்.ஏ.) சார்பில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.

    காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த ஹூமா குரேஷி ரஜினிகாந்த்தும், ரஞ்சித்தும் தமிழ் கற்றுக் கொடுத்ததாக கூறினார். #HumaQureshi
    காலா படத்தில் ரஜினியின் காதலியாக வந்து கவர்ந்தவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்துப் பொண்ணு நான். அப்பா சலீம் குரேஷி டெல்லியில் நிறைய ரெஸ்டாரன்ட்களை நடத்திட்டிருக்கார். அம்மா அமீனா குரேஷி குடும்பத்தலைவி. 2008ல் படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்கணும்ங்கிற கனவோட மும்பை வந்தேன். விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். 2012ல் அனுராக் காஷ்யப் இயக்கத்தில ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’ படத்துல் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டாங்க. கூடவே நிறைய இந்திய சினிமா விருதுகளையும் அந்தப் படம் வாங்குச்சு. எனக்கும் பிலிம் பேரின் ‘சிறந்த புதுமுக நடிகை’ விருது கிடைச்சுச்சு. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரைக்கும் என்னோட முதல் படம் ‘வொயிட்’. இந்த மலையாளப் படத்தில் மம்மூட்டி சாரோட சேர்ந்து நடிச்சேன். ‘வைசிராய்ஸ் ஹவுஸ்’ங்கிற ஆங்கிலப் படத்திலும் நடிச்சிருக்கேன்.”



    சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?

    சமையல், டிராவல் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேயுமே போக நேரம் கிடைக்கலைனா பீச்சுக்குப் போவேன். ‘காலா’ படத்தோட சில காட்சிகளை சென்னையில எடுத்தப்போ, அடிக்கடி பீச்சுக்குப் போயிட்டு வர்றதை வழக்கமா வெச்சிருந்தேன்.

    மொழி என்னைக்குமே நடிப்புக்குத் தடையா இருந்ததில்லை. ரஞ்சித் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்தாங்க. மம்மூட்டி சாருடன் வேலை பார்க்கும்போது, அவர் எனக்கு மலையாளம் கத்துக்கொடுத்தார். நிறைய மொழிகளைக் கத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பதான் சரிவர உணர்ச்சிகளைத் திரையில் வெளிப்படுத்த முடியும்.

    இந்தியில் ஒரு நடிகைன்னா தோல் நிறத்துல ஆரம்பிச்சு உயரம் வரைக்கும் ‘இப்படித்தான் இருக்கணும்’னு நிறைய விதிமுறைகள் இருக்கு. ஆனா, தமிழ் சினிமா அப்படி இல்லை. நிஜ கதாபாத்திரங்களைத் திரையில காட்டணும்னு நெனைக்கிறாங்க. அதனாலதான் வர்த்தக நோக்கத்தையும் தாண்டி, தென்னிந்திய சினிமா ஒரு படி மேல இருக்கு. அந்த வகையில் நயன்தாரா ரொம்பப் பிடிக்கும். #HumaQureshi

    அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித், அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மூலம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க இருக்கிறார். #PaRanjith
    அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். அடுத்து இந்தியில் படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் இணைய தொடர்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அந்த வரிசையில் ரஞ்சித்தும் ஒரு இணைய தொடர் தயாரிக்க இருக்கிறார். இது மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாக இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை பல மர்மங்களை உள்ளடக்கியது.

    அவரது வாழ்க்கையில் இருந்து மரணம் வரை பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பாக இது உருவாக இருக்கிறது. சில்க்கின் வாழ்க்கை ஏற்கனவே ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் படமானது. பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை இணைய தொடராக வருகிறது. அதை போல சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறும் உருவாக உள்ளது.
    காலா படத்தில் புயல் என்ற பெயரில் வலம் வந்த பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டீல் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். #VijaySethupathi #AnjaliPatil
    காலா படத்தில் புயல் சாருமதி என்னும் போராளி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகை அஞ்சலி பாட்டீல். ஒரு பேட்டியில் ‘தமிழில் எந்த நடிகர்களோடு நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு’ பலர் இருக்கிறார்கள். முக்கியமாக விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும். அவருடைய படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி அவருடைய வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். எனவே அவருடன் நடிக்க விருப்பம்’ என்று கூறி இருக்கிறார்.

    அஞ்சலி பாட்டீல் அடுத்ததாக ஆவணப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் மராத்தியில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இரண்டு தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #VijaySethupathi #AnjaliPatil
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது. படம் குறித்து வெளிவரும் எதிர்மறை செய்திகளில் உண்மையில்லை என தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Kaala #WunderbarFilms #Dhanush
    சென்னை:

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா. கடந்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து காலா படத்துக்கு சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, காலா படம் நஷ்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளர் தனுஷ் செட்டில் செய்ய முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.



    இந்நிலையில், காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது என வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. படம் குறித்து எதிர்மறையாக வெளிவரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த ரஜினிக்கு நன்றி. இந்த படத்தை வெற்றி படமாக்க்கிய ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். #Rajinikanth #Kaala #WunderbarFilms #Dhanush
    காலா படத்தில் புரட்சி பெண்ணாக நடித்த அஞ்சலி பாட்டீல் பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மாதிரி ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். #AnjaliPatil
    காலா படத்தில் புயல் சாருமதியாக வந்து ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சலி பாட்டீல். அவரிடம் தொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு’ சர்வதேச ஆவணப்படம் ஒன்றை இயக்கி வருகிறேன்.

    அடுத்த மாதம் திருவண்ணாமலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ‘மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்’னு ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு டிசைனரும்கூட. கவிதைகள் எழுதுவேன். தமிழில் நிறைய படங்களில் நடிக்கும் ஐடியா இருக்கு. 



    புயல் மாதிரி புரட்சி கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் வேறுவகை கதாபாத்திரங்களுக்கும் காத்திருக்கிறேன். ஏஞ்சலினா ஜோலி மாதிரி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் பண்ணணும் என்பது நீண்ட நாள் கனவு’ என்று கூறி இருக்கிறார்.
    மூத்த நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேச வேண்டும் என்று காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஹூமா குரேஷி கூறியுள்ளார். #HumaQureshi
    தமிழில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஹூமா குரேஷி. இந்தி திரையுலகில் பிரபல நடிகையான இவரிடம் செய்தியாளர்கள், ஹாலிவுட்டில் புகழ் பெற்ற #மீடு பிரசாரம் (#MeToo) பாலிவுட்டிற்கு இன்னும் வரவில்லை என நீங்கள் மனவருத்தம் அடைந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த குரேஷி, அது நடக்க போவதில்லை (இந்தி திரையுலகம்). ஹாலிவுட்டில் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய பல நடிகைகள் இதுபற்றி பேசியுள்ளனர்.

    அதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவிலும் இதுபோல் நடைபெற வேண்டும் என உண்மையில் நான் நம்புகிறேன். அதற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்.

    ஆனால் இது திரை துறையில் நடைபெற வேண்டும் என்று மட்டும் நான் உணரவில்லை. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இது நடைபெற வேண்டும் என கூறியுள்ளார்.



    பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள நிலையில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர்கள் பேச முற்படுவதில்லை. திரைப்படங்களில் நடிப்பவர்களை நாம் எப்படி காண்கிறோம்? என்றும் யோசிக்க வேண்டும். இது வீட்டில் இருந்தே தொடங்குகிறது.

    ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் பற்றி கூற முன்வருகிறார் எனில் அவரது நடத்தையில் குறை காணும் முயற்சியை நாம் தொடங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
    இனி தான் நடிக்கும் படங்களில் அரசியலே இடம் பெறக்கூடாது என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Rajini #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். தான் நடிக்கும் படங்கள் வெளியாகும் நாளில் சென்னையில் இருப்பதை எப்போதுமே தவிர்த்து விடுவார். இந்த முறை படப்பிடிப்பை தேர்ந்தெடுத்தார்.

    ரஜினி செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கி விட்டனர். படப்பிடிப்பில் இருந்தபடியே ‘காலா’ படம் பற்றி விசாரித்தார். படத்துக்கு எல்லா தரப்புகளில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் உற்சாகம் ஆனார்.

    ரஜினி நடிக்கும் எல்லா படங்களிலும் இளமையான தோற்றத்தில் சில காட்சிகளிலாவது வருவார். அப்படி காலாவில் இல்லை. அதோடு தன் வயதுக்கேற்ற ஜோடியுடன் நடித்து இருந்தார். எனவே இந்த மாற்றங்களை தனது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தனது ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டது ரஜினிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த படத்தில் ரஜினி மொத்தமே 30 நாட்கள் தான் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது. அதில் ரஜினிக்கான காட்சிகள் திட்டமிடப்படவில்லை. இந்த படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.

    படப்பிடிப்புக்கு முன்னர் முழு கதையை படிக்கும்போதும் அதை சரிபார்த்துக்கொண்டார். காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் என்பது ரஜினிக்கு மைனசாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. எனவே சர்ச்சையை தவிர்க்க ரஜினி நடித்துவரும் படங்களில் இனி அரசியல் இருக்காது என்றே தெரிகிறது. 

    சென்னை வந்தபிறகு ஒட்டுமொத்தமாக மீண்டும் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பின்னர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கும். மாநாட்டிலேயே கட்சி பெயர் அறிவிக்கப்படலாம்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த், இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார். #Kaala #Rajini
    ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. நில உரிமைக்காக போராடும் அடித்தட்டு மக்களை பற்றிய படம் என்பதாலும் ரஜினி சமீபத்தில் மக்கள் போராட்டத்துக்கு எதிராக சில கருத்துகளை கூறியதாக சர்ச்சை கிளம்பியதாலும் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானது.

    காவிரி பிரச்சினையில் ரஜினியின் நிலைப்பாடு காரணமாக கர்நாடகாவிலும் ரஜினியின் சர்ச்சை பேச்சால் உலக நாடுகளில் உள்ள தமிழர்களிடமும் பெரும் எதிர்ப்பு தோன்றியது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் டார்ஜிலிங்கில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி செய்தியாளர்களிடம் பேசினார்.

    அவர் காலா படம் பற்றி கூறும்போது ‘ காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது என்று கூறினார்.

    அவர் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    படப்பிடிப்பு நடைபெறும் குர்சியாங் மலைப்பகுதிக்கு மேற்கு வங்க சுற்றுலாத்துறை அதிகாரிகள் வருகை தந்து ரஜினியை சந்தித்தனர். மம்தாவின் வாழ்த்துகளை ரஜினியிடம் தெரிவிக்க வந்ததாக அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே காலா படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் படத்தின் கதை பற்றிய சர்ச்சைக்கு பதிலளிக்கும் போது ‘இந்த படம் யாரைப் பற்றிய உண்மைக்கதையும் இல்லை. இது முழுக்க முழுக்க கற்பனையில் உருவானது’ என்று கூறி உள்ளார்.

    திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்று தாராவி மக்களுக்காக போராடிய திரவியம் நாடாரின் கதை தான் காலா படம் என்று அவரது வாரிசுகள் வழக்கு தொடுத்தது குறிப்பிடத் தக்கது.
    ×