என் மலர்
நீங்கள் தேடியது "Kaamatchi amman"
- ‘க’ என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும்.
- அந்த ‘க’வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது. ‘கா’
காமாட்சி என்றால் கருணை வடிவானவள்.
அன்பே வடிவானவள் என்று பொருள்.
தன்னை வணங்கும் அடியவர்களை தன் அன்பால் அரவணைப்பவள் காமாட்சி.
'காம' என்றால் 'ஆசை' (விருப்பம்), 'அட்சி' (ஆட்சி) என்றால் 'கண்' என்றும் 'ரட்சித்தல்' என்றும் 'ஆட்சி செய்தல்' என்றும் பொருள்.
குழந்தைகளாகிய நம்மீது அன்பைப் பொழியும் கண்களை உடைய தாய்தான் 'காமாட்சி' அருள்மிகு காமாட்சியின் கண்களுக்கு உள்ள விசேஷ சக்தி மிகவும் அலாதியானது. அளவிட முடியாதது.
'கா'வையும் 'மா'வையும் அட்சங்களாக (கண்களாக) கொண்டவள் எவளோ அவளே காமாட்சி எனப்படுகிறாள்.
'க' என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும்.
அந்த 'க'வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது. 'கா' அவ்வாறே,
'மா' என்பது லட்சுமியைக் குறிப்பதாகும். 'மா' தவன் என்றால் லட்சுமியின் பதி என்பதாகும்.
இதன்படி பார்த்தால் 'கா' வான சரஸ்வதியையும், 'மா' வான லட்சுமியையும் தன் இரு கண்களாகக் கொண்ட காமாட்சி காருண்யத்தையும், கல்வியையும், செல்வத்தையும் வாரி வாரி மாரியாய் வழங்குபவள்.
- அன்னையின் எழில்மிகு நெற்றியில் திரிபுண்டரமான பிறைநிலவாய் திருநீறு.
- வலக்கால் முன்புறமாக மேல் நோக்கி மடங்கியிருக்கிறது.
மாமரக்காடு நடுவே பிலத்துவாரம்.
சுற்றிலும் கொழுந்து விட்டெரியும் பஞ்சாக்னி.
அதன் நடுவே காமாட்சி.
அன்னையின் எழில்மிகு நெற்றியில் திரிபுண்டரமான பிறைநிலவாய் திருநீறு.
கார்மேகம் வியக்கின்ற கார்குழல் அவிழ்ந்து முதுகிலும், தோள்களிலும் கருநுரை வெள்ளமாய்ப் பரவிக்கிடக்கிறது.
வலக்கரம் உயர்ந்து, சிரத்தின் உச்சியில் ருத்திராட்ச மாலையை விரல்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இடக்கரம் மார்பு ஊடாக மடிந்து, விரல்களில் சின்முத்திரையுடன் விளங்குகிறது.
இடக்கால் பெருவிரல் ஊன்ற பஞ்சாக்னியின் வெஞ்சுடர் முனையில் நிற்கிறது.
வலக்கால் முன்புறமாக மேல் நோக்கி மடங்கியிருக்கிறது.
கண்மலர்கள் குவிந்துள்ளன. திருவாய்மலர் பஞ்சாட்சரத் திருப்பெயரை உரைத்துக் கொண்டிருக்கிறது. மனமோ யோக தியானத்தில் தவழ்கிறது.
இதுவே அன்னையின் தவக்கோலம்.
- நோய் நொடிகள் அண்டாது. ஆயுளும் நீடித்திருக்கும்.
- நல்ல புத்திரர்கள் பெறலாம். செல்வம் கொழிக்கும். இடையூறுகள் யாவும் அகன்றுவிடும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாங்காட்டு அம்மனை வழிபட்டால் வாழ்க்கை ஒளிபெறும்.
மனத்தில் அச்சங்கள் அகன்று, தளர்ச்சி நீங்கி அனைத்து வளங்களும் ஏற்படும். புகழ் உண்டாகும்.
திங்கட்கிழமைகளில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் விலகும்.
உடல் நலம் குறைவுற்றிருந்தால் உடல் நலம் பெறும். உடல் நலமும் நீண்ட ஆயுளும் உண்டாகும்.
மாங்கல்ய பாக்கியம் ஏற்படும். சோம வார விரதமிருந்து அம்மனை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும்.
செவ்வாய்க் கிழமைகளில் அன்னை காமாட்சியை வழிபட்டு வந்தால் அமங்கலங்கள் நீங்கி மங்கலம் உண்டாகும்.
நீண்ட காலமாகத் திருமணமாகாத கன்னிப் பெண்களின் துயர் நீங்கித் திருமணம் கூடும்.
செவ்வாய் தோஷம் என்பது வேதனைக்குரியது என்பர்.
திருமணத் தடங்கல் அல்லது மணந்து வாழும்போது பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பர்.
அத்தகைய சங்கடங்கள் நேராதவாறு தடுத்து அருள்புரிவாள் அன்னை காமாட்சி.
நோய் நொடிகள், பேய், பிசாசு, மாய மந்திரங்கள் போன்ற தொல்லைகளிலிருந்தும் காத்தருள்வாள்.
புதன் கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் அறிவு விருத்தியாகும்.
கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். அதனால் மேன்மையும் பெறலாம்.
கவிஞர்கள், கலைத்துறையில் ஈடுபட்டவர்கள், ஜோதிடர்கள், வணிகர்கள் போன்றோர் புதன் கிழமைகளில் சென்று பராசக்தியை வழிபட்டு வந்தால் அவர்கள் துறையில் மேம்பட்டு விளங்குவர்.
வியாழக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தொல்லைகள் யாவும் நீங்கி சிறப்புகள் உண்டாகும்.
பொன்னும் பொருளும் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வு ஏற்படும்.
நோய் நொடிகள் அண்டாது. ஆயுளும் நீடித்திருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
நல்ல புத்திரர்கள் பெறலாம். செல்வம் கொழிக்கும். எத்தகைய இடையூறு இருந்தாலும் யாவும் அகன்றுவிடும்.
சனிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்தால் வம்பு வழக்குகள், விரோதிகளின் தொல்லைகள் போன்ற எல்லாமே நம்மை ஒன்றும் செய்யாது காத்தருள்வாள்.
நீண்ட ஆயுளையும் அளிப்பாள்.
ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.
சித்திரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்ற திருவிழாக்கள் மாங்காட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
- ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வணங்கும் முறைகள் உள்ளன.
- மாங்காட்டில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைதான் “ஆறு வார வழிபாட்டு முறையாகும்”.
உலகில் பிறந்துவிட்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் மனக்குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.
கவலைகளைப் போக்குவதற்கே அன்னை "காமாட்சி"யாக 'மாங்காடு பதி'யினிலே வடிவெடுத்திருக்கிறாள்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வணங்கும் முறைகள் உள்ளன.
அதுபோல் மாங்காட்டில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைதான் "ஆறு வார வழிபாட்டு முறையாகும்".
"ஆறுவார வழிபாடு" என்பது 'ஆறு முழுமையான வாரங்கள்' நமது கோரிக்கையை வைத்து அம்மனை வழிபடுவதாகும்.
முதல் வாரம் செல்லும் போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய் போன்ற அர்ச்சனைப் பொருட்களுடன் மிக முக்கியமாக
"இரண்டு" எலுமிச்சைப் பழங்களைக் கொண்டு சென்று,
உங்கள் வேண்டுதலை அம்மனிடம் சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும்.
ஸ்ரீ அர்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய ஸ்ரீ ஆதிகாமாட்சியை தொழுதுவிட்டு,
ஸ்ரீதபஸ் காமாட்சியை வணங்குகையில் நாம் வருவது எத்தனையாவது வாரம் என்று சொன்னால் "ஒரு" எலுமிச்சையைத் தருவார்கள்.
அதைக் கொண்டு வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட்டு வருதல் வேண்டும்.
இப்படி முதல் வார வழிபாடு முடிந்து அடுத்த வாரம் செல்கையில் வீட்டில் பூஜித்த எலுமிச்சையுடன் புதிதாக ஒன்றை வாங்கி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
இம்முறையும் ஸ்ரீ தபஸ் காமாட்சி சன்னதியில் ஒரு எலுமிச்சையைப் பெற்று வந்து இரண்டாவது வார வழிபாடு வீட்டிலேயே அனுஷ்டிக்க வேண்டும்.
இது போன்றே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது வாரமும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ காமாட்சியைத் தொழுது
எலுமிச்சை பழையது புதியது இரண்டையும் கொடுத்து சன்னதியில் தரும் எலுமிச்சையைக் கொண்டு வந்து வீட்டில் பூஜிக்க வேண்டும்.
ஆறாவது வார வழிபாட்டை வீட்டில் முடித்தவுடன் ஏழாவது முறையாக ஆலயத்திற்குச் சென்று ஆறுவார வழிபாட்டினை முறையாக முடிக்க வேண்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். முதல் வாரம் எந்தக் கிழமையில் செல்கின்றீர்களோ அதே கிழமையில் அடுத்த வாரம் செல்லும் போதுதான் முதல் வார வழிபாடு பூர்த்தியாகிறது.
மூன்றாவது முறை செல்லும் போது இரண்டாவது வார வழிபாடு பூர்த்தியாகிறது.
அதே போன்று அதே கிழமைகளில் ஏழாவது முறை செல்லும் போதுதான் ஆறு வார வழிபாடு பூர்த்தியாகின்றது.
அப்படி பூர்த்தியாகும் நாளன்று அர்ச்சனைப் பொருட்களுடன், நன்கு காய்ச்சிய பாலுடன் ஏலக்காய், கற்கண்டு, பச்சைக் கற்பூரம்,தேன் போன்றவற்றை
வீட்டிலேயே கலந்து உங்கள் வசதிப்படி எந்த அளவு முடியுமோ அவ்வளவு எடுத்து வந்து அம்மனுக்கு நிவேதனம் செய்து பிரகாரத்தில் உள்ள பக்தர்களுக்கு விநியோகித்து ஆறுவார வழிபாட்டினை முடிக்க வேண்டும்.
சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் நிவேதனப் பாலை வழங்கலாம்.
இது பால் பிரியளான அம்மனுக்கே கொடுத்தது போலகும். இம்முறை எலுமிச்சையை வாங்குதல் கூடாது.
இப்படி தொழுதால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி.
முடிந்தால் முதல் வாரம் செல்லும் கிழமைகளிலேயே மற்ற ஆறு வாரங்களும் சென்று வந்தால் நலம்.
ஆனால் பெண்களுக்கு இது அவ்வளவாகப் பொருந்தாது.
அப்போது மாற்றுக் கிழமைகளில் சென்று வரலாம். தவறில்லை.
ஆறுவார வழிபாட்டின் போது இந்நூலிலுள்ள ஆறுவாரப் பாடல்கள் மற்றும் துதிப் பாடல்களைப் பாடித் துதித்தால் வெற்றி நிச்சயம்.
ஏனெனில் இவை பலகாலம் அம்மன் சன்னதியில் பாடப்பெற்று அம்மனால் ரசிக்கப்பட்டவையாகும்.
மேலும் வீட்டில் எலுமிச்சையை வைத்துப் பூஜிக்கும் போது ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய காமாட்சி அம்மன் படத்தின் முன் வைத்து அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும்.
- செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.
3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள்.
அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.
4. மாங்காடுக்கு வடமொழியில் "ஆம்ராரண்யம்" என்று பெயர்.
அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.
5. காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.
7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள்.
அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.
8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர்.
மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.
9. இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.
10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
11. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
12. இத்திருக்கோவிலில் "எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு" பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப் படுகிறது.
13. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
14. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது.
சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.
15. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.
16. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.
17. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.
18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.
19. மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
20. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் "அழகிய சோழ நல்லூர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
22. அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.
23. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும்.
இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.
24. மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.
25. கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.
- மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.
பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தான் அம்மனை அதிகம் வழிபடுகிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு இயற்கையாகவே அம்மன் மீது இருக்கும் ஈர்ப்பும், ஈடுபாடும் தான் காரணமாகும்.
பெண்கள் இந்த ஆடி மாதத்தில் எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து
காமாட்சி அம்மனுக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
துன்பங்கள் நீங்க காமாட்சியை வழிபடுவது நல்லது.
எல்லாத் தீமைகளையும் அழித்து எல்லாத் தடைகளையும் போக்கி நல்வாழ்க்கையைத் தருபவள் காமாட்சியே ஆவாள்.
வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.
சிவன், விஷ்ணு, பிரம்மன், யமன், இந்திரன், முதலான தேவர்களின் மகாசக்திகளின் ஒட்டு மொத்த வடிவமாக காமாட்சி விளங்குவதால் அவள் பல ரூபங்களை கொண்டவள்.
அவளை நினைத்தாலும் அவளுடைய மகாமந்திரங்களை ஜபித்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய மரண பயம், இகலோக பயம், பரலோக பயம், அரவு பயம், சுருதி பயம், வேதனா பயங்கள்உள்ளிட்ட அனைத்து பயங்களும் ஓடி ஒளிகின்றன.
ஆடி மாதம் முழுவதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் காமாட்சியை வழிபடுவது சாலச்சிறந்தது.
ஒருவருடைய ஜாதகத்தில் கிரக தோஷத்தால் திருமணத் தடைகள் ஏற்பட்டிருக்கலாம்.
இதிலிருந்து நிவர்த்தி பெற காமாட்சிக்கு புடவை சார்த்தி எலுமிச்சம்பழ மாலை, செவ்வரளி மாலை அணிவித்து
பசு நெய் அல்லது நல்லெண்ணையால் தன் வயது எண்ணிக்கையுள்ள தீபம் ஏற்றி குங்குமத்தால்
அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும்.
மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.
அம்பாளுக்கு எலுமிச்சை பழம் மாலை சார்த்தும் போது 18, 27, 54, 108, 1008 எண்ணிக்கை உள்ள
எலுமிச்சம் பழ மாலையைச் சாற்றுவதால் நமக்கு உண்டாகும் உக்கிரமமான நோய்கள், வயிற்று உபாதைகள் தணிகின்றன.
தீராத துன்பங்கள் நீங்குகின்றன.
காமாட்சி மற்றும் துர்க்கை அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் சிறப்புடையது எலுமிச்சம்பழம்,
இதனை குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கி சாற்றை பிழிந்துவிட்டு மூடியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வந்தால் அம்மனின் அருள் எளிதில் கிடைக்கும்.
கன்னிப்பெண்கள் இவ்வாறு விளக்கேற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணியும் வழக்கமும் உள்ளது.
இவ்வாறு செய்வதால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.
எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும்.
அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம்,
எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று
உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள்.
போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.
பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு
எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன்
உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
பொதுவாக பத்ரகாளி, துர்க்கை, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது
எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இந்த மாலையை தயாரிக்கும் போது ஒரே அளவுள்ள
மஞ்சள் நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்ப்பது நல்லது.
பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
பழங்கள் காயாக இருக்கக்கூடாது.
எலுமிச்சை மாலை சாத்தும் போது அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும்.
கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.