என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kabaddi Player"
- கபடி வீரர் அருணாச்சலம், குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
- கபடி வீரர் அருணாச்சலம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் குரும்பலாபேரியை சேர்ந்த கபடி வீரர் அருணாச்சலம், குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரது குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
கபடி வீரர் அருணாச்சலம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேனி மாவட்டத்தில் கபடி வீராங்கனை உள்பட 4 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியபாண்டி மகள் தமயந்தி(19). சம்பவத்தன்று அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தமயந்தி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் சரவணன் மகள் சங்கனி(19). இவர் திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். குலதெய்வ வழிபாட்டுக்காக சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜயோக்கியம் மகள் சரண்யா(17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கபடி வீராங்கனையாக உள்ளார். சம்பவத்தன்று அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த சரண்யா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சரண்யாவை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி மகள் மஞ்சுளா(17). இவர் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலை யில் அவர் திடீரென மாயானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் திருச்சி அருகே நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு நேற்று சென்றனர்.
- டி.பளூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையில் விபத்துக்குள்ளானது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூராசாமி மகன் சரத்குமார் (வயது 23). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். சரத்குமார் முன்னதாகவே கபடி விளையாட்டு வீரர்.இந்நிலையில் சரத்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த கதிரவன் (20) மணிமாறன் (20)என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி அருகே நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு நேற்று சென்றனர்.
அப்போது டி.பளூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சரத்குமாரும், கதிரவன், மணிமாறனும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சரத்குமாரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட கதிரவன் மணிமாறனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் விபத்தில் இறந்த சரத்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி போலீசார் காட்டுமன்னார்கோவில் போலீசார் இடம் ஒப்ப டைத்தனர். இதனையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர்.
- போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் ஊடையகாடு கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திடலில் ராகவன் நினைவாக மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர். போட்டியை நிமல் ராகவன் ஒருங்கிணைத்து நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை திருவாரூர் மாவட்டம் வடுவூர் அணியினரும், 2-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் முல்லை வெண்புறா அணியும், 3-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடி அணியும், 4-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் பெற்றனர்.
இதேபோல, பெண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை மதுரை மாவட்டம் சித்தம்பட்டி அணியினரும், 2-ம் பரிசை கட்டகுடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 3-ம் பரிசை தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தென்னவன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 4-ம் பரிசை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் செல்வம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பை பெற்றனர். நிறைவாக முன்னாள் மாநில கபடி வீரர் வெண்புறா சடகோபன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்