என் மலர்
நீங்கள் தேடியது "kabul"
- ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பசி மற்றும் சுகாதார நெருக்கடி.
- சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுகின்றன.
தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று சில குடியிருப்பாளர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜான் சிஃப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
- பரபரப்பு நிறைந்த தெரு ஒன்றில் குண்டு வெடித்தது.
- வெடிகுண்டு தாக்குதல் குறித்து தாலிபான் அரசு விசாரணை
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பரபரப்பாக காணப்படும் வணிக நிறுவனங்கள் நிறைந்த தெருவில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்தனர்.
தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக தனது டெலிகிராம் சேனலில் சன்னி முஸ்லிம் போராளிக் குழு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உதவவும், உயிரிழப்புகளை மதிப்பிடவும் ஒரு விசாரணைக் குழு குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி டெல்லி திரும்பினார்கள்.
- தலிபான் மூத்த தலைவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு கடுமையான கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி டெல்லி திரும்பினார்கள்.
இந்திய தூதரகமும் மூடப்பட்டது. இதனால் 10 மாதங்களாக தூதரகம் செயல்படாமல் முடங்கியது.
இந்த நிலையில் காபூலில் மீண்டும் இந்திய தூதரகம் நேற்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி இந்திய தொழில்நுட்ப குழுவினர் காபூல் சென்று உள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில் நுட்ப குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று உள்ளனர். சமீபத்தில் தலிபான் மூத்த தலைவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்துபேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் என்று குறிப்பிட்டு உள்ளனர்,
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்து விட்டனர். பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்து உள்ளது.
இதையடுத்து நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் காபூல் புறப்பட்டு சென்றது.
இந்த பொருட்கள் அங்குள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வாரம் முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி 33 மாகாணங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நேற்று காலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தலைமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பயங்கரவாதி உடல் சிதறி பலியானார். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர், 2 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்த தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #SuicideAttack #Afghanistan #ElectionWorker
இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதில் பாக்டியா, காபுல், பால்க், நங்கர்ஹார், கந்தஹார் ஆகிய அணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி20 ஸ்பெஷலிஸ்ட் ஆன ஷாகித் அப்ரிடி, கிறிஸ் கெய்ல், ரஷித் கான், அந்த்ரே ரஸல், பிராண்டன் மெக்கல்லம் ஆகியோர் ஐகான் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஐந்து வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மீது அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சகத்தில் இருந்து வெளிவரும் அதிகாரிகளை குறிவைத்து இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,ம் இதில் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Afganistan
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மத்திய பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு இன்று வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினான்.
இதேபோல், மேலும் இரு காவல் நிலையங்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கரவாதிகள் இன்று வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல்களால் உண்டான உயிரிழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Kabulblasts