என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaithi 2"

    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
    • சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘DILLI RETURNS’ என்று ட்வீட் செய்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    நேற்று பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பரிசளித்தார் கார்த்தி. அது ப்ளாட்டினத்தினால் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து 'DILLI RETURNS' என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் 'கைதி 2' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.
    • அர்ஜூன் தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

    கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது….

    என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி என்றார்.

    அதைதொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.

    நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா? என்ற கேட்ட கேள்விக்கு

    நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.

    அர்ஜூன் தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.
    • மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியாவர் கார்த்தி.

    இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கார்த்தி அறிமுகமாகினார். நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.

    அதைத்தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு எச்,வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிகவும் திரில்லராக எடுத்து இருப்பார் எச் வினோத்.

    பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கைதி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கார்த்தி திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

    கார்த்தி ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்திற்கு பிறகு கார்த்தி சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டு லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கடுத்து எச். வினோத் இயக்கத்தில் தீரன் பாகம் 2ல் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் தளபதி 69 படத்தை இயக்கி முடித்தப்பின் தீரன் பாகம் இரண்டை இயக்கவுள்ளார். இவ்வாறு கார்த்தி பல சுவாரசியமான லைன் அப்ஸில் உள்ளார். அடுத்து வெளிவரும் கார்த்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி.
    • கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க இரத்த தானம் முகாம்கள் நடைபெற்றது. இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் முதற்கட்டமாக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 ரசிகர்களை நடிகர் கார்த்தி ஞாற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்தார்.

     

    சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது, "அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது பிறந்தநாளில், இரத்த தானம் செய்த போதே, உங்களுடன் கலந்து கொள்ள நினைத்தேன். எனினும், உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் உங்களுடன் இணைந்து கொள்வேன். நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி."

    "நான் மருத்துவர்களுடன் குழுவில் இருக்கிறேன். அவர்கள் இரத்தம் இல்லை என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு பெரிய அளவில் யாரும் இரத்தம் கொடுப்பதில்லை. அவரவர் தங்களின் உறவினர்களுக்கு கொடுத்துக் கொள்வார்கள்.

    யாரென்றே தெரியாதவர்களுக்கு இரத்தம் கொடுத்துள்ளீர்கள். அது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி. அடுத்த வருடம் உங்களுடன் இணைந்து முதலில் நான் துவங்கி வைக்கிறேன்."

    "அனைவரும் உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். நாம் செய்த நல்ல விஷயங்கள் அவர்களுக்கு சென்று சேர வேண்டும். அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி."

    "இரண்டு படங்கள் முடிந்துவிட்டன, விரைவில் அவை ரிலீஸ் ஆகிவிடும். அடுத்து சர்தார் 2 துவங்க இருக்கிறது. அடுத்த வருடம் லோகேஷூடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும்," என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தின் நடித்துள்ளார்.
    • வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தின் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடித்த திரைப்படம் திரையரங்கிள் வெளியாவதால் கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    திரைப்படக்குழு நேற்று விசாகபட்டினத்தில் படத்தை ப்ரோமோட் செய்வதற்காக விழா நடத்தினர். அதில் சூர்யா, இயக்குனர் சிவா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    அப்பொழுது சூர்யா அவர் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப்போகும் திரைப்படங்களின் தகவல்களை கூறினார். அதில் ஒன்று லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கைதி 2 திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் மற்றும் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கான தனி திரைப்படத்திலும் நடிக்கவுள்ளேன் ஆனால் இப்படங்கள் எல்லாம் டிஸ்கஷன் ஸ்டேஜில் உள்ளன விரைவில் இப்படங்களில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

    சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 நடித்து முடித்துள்ளார் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

     

    சர்தார்

    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    சர்தார் - கார்த்தி

    சர்தார் - கார்த்தி

    இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றியைத் கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 'கைதி 2' எப்பொழுது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த வருடம் படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.

     

    கார்த்தி

    கார்த்தி

    மேலும் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக கொண்டு வருகிறார். அதேபோல் 'தளபதி 67' படத்தில் நீங்கள் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "அது தெரியவில்லை. அது எளிதும் கிடையாது. நாம் ஆசைப்படலாம். இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வேறு. அது தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது" என்றார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியாகின. 

    இந்த நிலையில் கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கைதி படம் 2019-ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. ஜப்பானிலும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள். 

    கார்த்தி, லோகேஷ் கனகராஜ்
    கார்த்தி, லோகேஷ் கனகராஜ்

    கைதி 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

    லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் இருவரும் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×