என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaithi2"

    • கங்குவா படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
    • கார்த்தி தற்போது ‘சர்தார்-2', ‘வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் சிவா, 2011-ம் ஆண்டில் 'சிறுத்தை' படத்தை இயக்கி அறிமுகமானார். கார்த்தி, தமன்னா நடித்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா என்றே அவர் அழைக்கப்படுகிறார்.

    அதனைத்தொடர்ந்து அஜித்குமாரை வைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என தொடர் வெற்றி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த', சூர்யாவை வைத்து 'கங்குவா' படங்களை இயக்கினார். கங்குவா படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

    இந்தநிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சிவா - கார்த்தி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் அதிரடி படமாக எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது 'சர்தார்-2', 'வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் 'கைதி-2' படத்தில் நடிக்க போவதாகவும் பேசப்படுகிறது.

    இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி - சிவா கூட்டணி கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

    • கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கைதி'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், ட்விஸ்டுகளும் இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியது.


    இதைத்தொடர்ந்து, . 'கைதி 2' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 'கைதி 2' திரைப்படம் விரைவில் உருவாகும் என கார்த்தி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், படம் எப்போது தொடங்கப்படும் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 'கைதி', 'விக்ரம்' திரைப்படங்களில் நடித்த நடிகர் நரேன் 'கைதி 2' திரைப்படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நரேனிடம் 'கைது 2' எப்போது ரிலீஸ் ஆகும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.


    இதற்கு, "எல்சியூ-வில் அடுத்து வெளியாகப்போகும் படம் 'கைதி 2' தான், ஆனால், அதற்கு முன் எல்சியூ கன்னெக்டுடன் ஒரு 10 நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளார். அதில் நானும் நடித்திருக்கிறேன். எல்சியூ-வின் தொடக்கம் தான் அந்த ஷார்ட் பிலிம். அதன் பின் 'கைது 2' வெளியாகும்" என்று தெரிவித்தார்.

    எல்சியூ (lokesh cinematic universe)-ல் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கைதி'. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', விஜய் நடித்த 'லியோ' போன்ற படங்கள் எல்சியூ-வில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


    • திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • சட்த்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி 2019-ம் ஆண்டு வெளியான படம் 'கைதி'. இப்படத்தை எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தனர்.

    சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின்பு தான், லோகேஷ் கனகராஜ் பிரபலம் அடைந்தார்.

    இந்நிலையில், 'கைதி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது- கார்த்திக் மற்றும் எஸ்.ஆர். பிரவுக்கு நன்றி. இவர்களால் தான் 'லோகேஷ் யுனிவர்ஸ்' சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்," என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பதிவின் மூலம் கைதி இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் விரைவில் துவங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×