என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kalashetra"
- நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
- பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.
பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.
அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும்.
- புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு.
கலாசேத்ரா பாலியல் தொல்லை புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாசேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலாசேத்ரா அறக்கட்டளையின் நடன ஆசிரியர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
- சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
- பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை அடுத்து கலாஷேத்ரா கல்லூரியை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்குள் காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. திடீரென விடுதிகளை காலி செய்யுமாறு கூறினால் எங்கு செல்வது என்று மாணவிகள் ஆதங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரை வெளியேறவிடாமல் முற்றுகையிட்டு மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மாணவிகள் முன்னிலையில் கல்லூரி முதல்வரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவிகள் கலைந்து செல்ல மறுப்பதால் கலாஷேத்ராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எனது ஒற்றுமையை தெரிவிக்க கலாஷேத்ராவுக்கு சென்றேன். அவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடக்க முடிந்தவரை ஆதரவளிப்பதாக உறுதியளித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Visited Kalakshetra to express my solidarity with the protesting students. Promised them support in whatever means possible to ensure they get justice in time. #AramVellumLegalAid pic.twitter.com/GQMeIVYDlc
— Vikraman R (@RVikraman) March 30, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்