search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalmi Kebab"

    சிக்கனை தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது கால்மி கபாப். இந்த கால்மி கபாப்பை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃப்ரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக கலந்து 24 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×