என் மலர்
நீங்கள் தேடியது "kanchana 3"
ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காஞ்சனா 3’ படத்தை கோடை மாதத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Kanchana3
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியான படம் `முனி'. அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடல் மட்டும் காட்சி படுத்தாமல் இருக்கிறார்கள்.

கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் என்பதால், ஏப்ரல் மாதம் 18ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
சிம்புவுடன் 'காளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை, தற்போது புதிய படம் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்க இருக்கிறார். #Simbu #STR #Vedika
தமிழில் ‘மதராஸி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வேதிகா. இதனையடுத்து லாரன்ஸுடன் ‘முனி’, சிம்புவுடன் ‘காளை’, அதர்வாவுடன் பரதேசி, சித்தார்த்துடன் காவியத்தலைவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வேதிகா நடித்துள்ளார். தற்போது, வேதிகா பாலிவுட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தி பாடி’ (The Body) என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘பாபநாசம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ரிஷி கபூர், இம்ரான் ஹாஸ்மி இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஹாரர் – திரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.