என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchana"

    காஞ்சனா 3 படத்தை இயக்கி இருக்கும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #RaghavaLawrence #Kanchana
    ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). இந்த படத்தில் வேதிகா மற்றும் ஓவியா கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப்பட்டு வருகிறது.



    இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் முதன் முதலாக இந்தியில் கால்பதிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.



    விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'. 

    அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா,  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.


    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019-ல் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    ரூ.80 கோடி சொத்துக்களை மீட்டு கோவிலுக்கு எழுதி வைத்தேன் என்று பழம்பெரும் நடிகை காஞ்சனா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Kanchana
    பழம்பெரும் நடிகை காஞ்சனா 1960 மற்றும் 70 -களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். இப்போது அவருக்கு 79 வயது ஆகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் கதாநாயகனுக்கு பாட்டியாக நடித்து இருந்தார். தனது சினிமா வாழ்க்கை குறித்த மலரும் நினைவுகளை காஞ்சனா பகிர்ந்தார். அவர் கூறியதாவது:-

    ‘‘நான் விமான பணிப்பெண்ணாக இருந்தேன். அப்போது இயக்குனர் ஸ்ரீதர் என்னைப் பார்த்து அவரது காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகியாக்கினார். எனது உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என்று ஸ்ரீதர் மாற்றினார். 1964-ல் அந்த படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் படங்கள் குவிந்தன. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். எனக்கு வாணிஸ்ரீ நெருங்கிய தோழியாக இருந்தார். 

    நான் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கிப் போட்டு இருந்தேன். அந்த சொத்துக்களை எனது உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என்று பெற்றோர்களுடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டேன். 



    ஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்கள் எனக்கு கிடைத்தன. உடனே ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன். எனக்கு திருமணம் செய்துவைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர். நானும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிட்டேன். 

    இப்போது எனது தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது தங்கை நன்றாக கவனித்துக்கொள்கிறார். இப்போது ஆன்மிக ஈடுபாடுகளில் தீவிரமாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையானை தியானம் செய்வதும், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதுமாக எனது பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் கேட்டு இருக்கிறேன்.’’

    இவ்வாறு காஞ்சனா கூறினார்.
    ×