என் மலர்
நீங்கள் தேடியது "Kanchipuram"
- ஸ்ரீ வரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும்.
- ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீ பூமாதேவியே அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ வரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும்.
எல்லா வைணவத் திருக் கோவில்களிலும் உற்சவருக்கு இரு புறமும், முறையே ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருப்பர்.
ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீ பூமாதேவியே அருள் பாலிக்கிறார்.
மாலிக்காபூரின் படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி இங்கிருந்த உற்சவ விக்கிரகங்கள் உடையார்பாளையம் ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
போர் அபாயம் நீங்கி, மீண்டும் உற்சவர்களை எடுத்து வந்தபோது இரண்டு உபய நாச்சியார்களும் பூமி பிராட்டியாகவே அமைந்து விட்டனராம்!
பிரம்மனின் யாகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால், வெப்பத்தின் காரணமாக பெருமாளின் திருமுகத்தில் வடுக்கள் ஏற்பட்டனவாம்.
அவற்றை உற்சவரின் திருமுகத்தில் காணலாம்.
- ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன்.
- இவர்கள் கௌதம முனிவரிடம் வேதம் பயின்று வந்தனர்.
ஸ்ரீவரதராஜர் கோவிலில் உள்ள 'வையமாளிகை பல்லி' தரிசனம் சிறப்பானது.
ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன்.
இவர்கள் கௌதம முனிவரிடம் வேதம் பயின்று வந்தனர்.
தினமும் குருவின் பூஜைக்குத் தேவையான தீர்த்தம் மற்றும் ஹோம சமித்துகளை சேகரித்துத் தருவது இவர்களின் வழக்கம்.
ஒரு நாள் குரு முன் வைத்த தீர்த்தக் குடத்தில் இருந்து இரண்டு பல்லிகள் குதித்து வெளியேறின.
சீடர்களது கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று எண்ணிய கௌதமர், இருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார்.
பிறகு, தவறுணர்ந்து சாப விமோசனம் வேண்டிய சீடர்களிடம், "ஒன்றுக்கு நூறாக பலன் தரும் சத்தியவிரத சேத்திரம் (காஞ்சி) சென்று ஸ்ரீ வரதராஜரை தியானித்து தவம் செய்தால் நலம் பெறலாம்!" என்றார் குரு.
அதன்படியே, சீடர்கள் இருவரும் பல்லி ரூபத்தில் இங்கு வந்து தவம் செய்தனர்.
பிற்காலத்தில், யானை ரூபத்தில் இருந்த இந்திரன், ஸ்ரீநரசிம்மர் அருளால் சுயரூபம் அடைந்த போது இவர்களும் சாப விமோசனம் பெற்றனர்.
இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கம்- வெள்ளியாலான இரு பல்லி ரூபங்களை இங்கு பிரதிஷ்டை செய்தான்.
இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
அயோத்தி மன்னன் சகரனின் மகன் அசமஞ்சனும், அவன் மனைவியும் சாபத்தால் பல்லிகள் ஆயினர்.
பின்னர் உபமன்யு முனிவரது அறிவுரைப்படி இங்கு வந்து ஸ்ரீவரதராஜரை தரிசித்து அருள்பெற்றனர்.
இவர்கள் நினைவாக அமைந்ததே பல்லி ரூபங்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.
- சித்ரா பௌர்ணமியன்று இரவு 12 மணிக்கு மேல் இங்கு பிரம்மா வந்து வழிபடுவதாக ஐதீகம்.
- ஒரு நாழிகை கழித்து உள்ளே சென்றால், பிரசாதம் நறுமணத்துடன் திகழுமாம்!
பெருமாளுக்கு துளசி மாலை, தாயாருக்குப் புடவை சாத்துதல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்தல் ஆகியன இங்கு நேர்த்திக் கடன்களாக இருக்கின்றன
சித்ரா பௌர்ணமியன்று இரவு 12 மணிக்கு மேல் இங்கு பிரம்மா வந்து வழிபடுவதாக ஐதீகம்.
எனவே அன்று, பெருமாளுக்கு பிரசாதம் படைத்து விட்டு பட்டர்கள் வெளியே வந்து விடுவர்.
ஒரு நாழிகை கழித்து உள்ளே சென்றால், பிரசாதம் நறுமணத்துடன் திகழுமாம்!
வெள்ளிக்கிழமை தோறும் பிராகாரங்களுக்குள் பிராட்டியார் திருவீதி உலா வருவார்.
ஏகாதசி தோறும் பெருமாள் உலா நடைபெறும். வெள்ளியும் ஏகாதசியும் சேர்ந்து வரும் நாளில் பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து உலா வருவர்.
- இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!
- இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது.
மாட வீதி எனப்படும் வெளிப்பிராகரத்தில் மேற்கு கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் இடப்புறம் நூற்றுக்கால் மண்டபம்.
முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒப்பனை செய்யும் பெண், விஸ்வாமித்ரர் யாகம், சீதா கல்யாணம், வாலி வதம்,
ராமபிரானின் கணையாழியை சீதாவிடம் தரும் அனுமன், கிளி வாகனத்தின் மீது ரதிதேவி, அன்ன வாகனத்தின் மீது
மன்மதன், சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வரும் அனுமன் மற்றும் தசாவதார காட்சிகள் என்று
சிற்ப களஞ்சியமாகத் திகழ்கிறது நூறு கால் மண்டபம்.
இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!
இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது.
இவற்றையும் சேர்த்தே நூறுகால்! விசேஷ நாட்களில் உற்சவ மூர்த்தியர் இந்த மேடையில் எழுந்தருள்கின்றனர்.
- ‘மஹா தேவ்யை’ என்ற வாக்கியத்தையே திருநாமமாகக் கொண்டு பெருந்தேவி தாயார் எனப்படுகிறார்.
- இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார்.
தனிச் சந்நிதியில் பெருந்தேவி தாயார், கல்யாண கோடி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி இரு தாமரை மலர்களை
ஏந்தி, அபய- வரத கரங்களுடன், பட்டாடை- அணிமணிகளுடன் பொன் மகுடம் தரித்து, அமர்ந்த கோலத்தில்
கருணை நாயகியாகக் காட்சி தருகிறார்.
'மஹா தேவ்யை' என்ற வாக்கியத்தையே திருநாமமாகக் கொண்டு பெருந்தேவி தாயார் எனப்படுகிறார்.
இவருக்கு அரித்ரா தேவி, மகாதேவி ஆகிய பெயர்களும் உண்டு.
திருமகள், பிருகு மகரிஷியின் புத்திர காமேஷ்டி யாகத்தில் ஸ்ரீ பெருந்தேவி தாயாராக அவதரித்து, பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரை பூஜித்து வந்தாராம்.
அவருக்கு அருள் புரிய திருவுளம் கொண்டார் பெருமாள்.
அதன்படி- பரமசிவன், பிரம்மர், பிருகு மகரிஷி, காசிபர், கண்வர், காத்தியாயனர், ஹரிதர் முதலிய முனிவர்கள் மற்றும் தேவர்கள் முன்னிலையில் ஸ்ரீபெருந்தேவியின் கரம் பற்றினாராம் வரதராஜர்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார்.
பெருந்தேவி தாயாருக்கு திருவீதி புறப்பாடு கிடையாது. எனவே தாயாரை, 'படிதாண்டாப் பத்தினி' என்பர்.
- காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து ‘ராம கிருஷ்ண’ அம்சத்துடன் விளங்குகிறார்.
- அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றனவாம்.
கருவறையில் புண்ணியகோடி விமானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீதேவராஜர்.
இவருக்கு தேவ பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், பேரருளாளன், தேவாதிராஜன், யக்ஞோத் பவர், கஜேந்திர வரதர், தேவராஜ ஸ்வாமி, மாணிக்க வரதன், பிரணதார்த்திஹரன் ஆகிய வேறு நாமங்களும் உண்டு.
திருவேங்கடத்தான்-ஸ்ரீகிருஷ்ணாம்சம் கொண்டவர். ஸ்ரீரங்கநாதர்- ஸ்ரீராமர் அம்சம் கொண்டவர்.
காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து 'ராம கிருஷ்ண' அம்சத்துடன் விளங்குகிறார்.
சித்ரா பௌர்ணமி அன்று பிரம்மதேவன் இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.
இதையடுத்த 14 நாட்கள் மாலைக் கதிரவனின் கிரணங்கள் மூலவரின் திருப்பாதங்களைத் தழுவுமாறு கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
உண்மை வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் ஸ்ரீவேதாந்த தேசிகரது, 'அடைக்கலப் பத்து' என்ற பாசுரங்களை வெள்ளிப் பதக்கங்களில் பொறித்து ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர்.
தவிர, திருவத்தியூரன் மீது அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச் சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் வரதராஜ ந்யாஸ தசகம் உட்பட இன்னும் பல நூல்களையும் இயற்றியுள்ளார் வேதாந்த தேசிகர்.
எம்பெருமானை சேவிக்க உகந்த வேளை, உஷத் காலம் என்பர்.
அப்போது, 'திருப்பள்ளியெழும் பெருமாளின் கழுத்தில், பெருந்தேவி தாயார், வரதரை இறுக அணைத்து சயனித்திருந்ததால் பதிந்திருக்கும் பொன் வளையல்களின் தழும்புகள் காணப்படுமாம்.
இதனால் மலர்ச்சியுடன் திகழும் பெருமாளை இந்த வேளையில் தரிசிப்பது, மகத்தானது!' என்கிறார் வேதாந்த தேசிகர்.
கள்ளழகர் வைகையில் இறங்குவது போல, ஸ்ரீவரதராஜ பெருமாள், காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.
மொகலாயர் படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜர் (உற்சவமூர்த்தி), காஞ்சிக்கு அருகில் வந்தவாசி செல்லும்
பாதையில் 4 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் அடைக்கலம் புரிந்தார்.
ஒரு வருட காலம் அவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவங்களும், செவிலிமேட்டில் நடைபெற்று வந்தது.
இதன் அடையாளமாக ஒவ்வொரு வருடம் சித்ரா பௌர்ணமி விழாவில் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி திரும்பும்போது செவிலிமேடு லட்சுமி நரசிம்மரை வலம் வந்து செல்கிறார்.
- வரதராஜ பெருமாளுக்கு சூட்டப்படும் தங்கக் கொண்டை பிரசித்திப் பெற்றது.
- இன்றும், இந்த ஆபரணத்தை கருட சேவையின்போது வரதருக்கு அணிவிப்பார்கள் என்றும் கூறுவர்.
வரதராஜ பெருமாளுக்கு சூட்டப்படும் தங்கக் கொண்டை பிரசித்திப் பெற்றது.
வெங்கடாத்ரி என்கிற வைணவர் காஞ்சிக்கு வந்தபோது ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு தங்கக் கொண்டை அளிக்க விரும்பினார்.
அதற்கான போதிய பணம் இல்லாததால் யாசகம் செய்து பொருள் சேர்த்தார்.
ஆபரணத்தின் நடுவில் பதிக்க வேண்டிய எமரால்ட் கற்களை, நகைத் தொழிலாளி தன் ஆசை நாயகியான நடன மாது ஒருத்தியிடம் கொடுத்து விட்டான்.
வெங்கடாத்ரி தஞ்சை சென்று, எமரால்டு கற்களைப் பெற்று வந்து ஆபரணம் செய்து முடித்து பெருமாளுக்கு அணிவித்தார் வெங்கடாத்ரி.
'அதைப் போன்ற ஆபரணங்களை பூதேவி- ஸ்ரீதேவி நாச்சியார்களுக்கும் அளிக்க வேண்டும்!' என கனவில் தோன்றி, பெருமாள் வேண்டிக் கொள்ள அவர்களுக்கும் விலை உயர்ந்த கொண்டைகளை அணிவித்தார் வெங்கடாத்ரி.
இவர் கவி பாடுவதிலும் வல்லவராம்.
ஆற்காடு யுத்தத்தின்போது நோய்வாய்ப்பட்ட ராபர்ட் கிளைவ், ஸ்ரீவரதரின் துளசி தீர்த்தம் பருகி, நோய் நீங்கப் பெற்றாராம்.
இதற்கு நன்றிக்கடனாக போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது, விலை உயர்ந்த மகர கண்டி (கழுத்தில் அணியும் ஆபரணம்) ஒன்றை வரதராஜருக்கு சமர்ப்பித்தாராம்.
ஒரு பிரம்மோற்சவத்தின்போது பெருமாளை தரிசித்த கிளைவ், ஸ்வாமியின் தெய்வீக தோற்றத்தில் மனமகிழ்ந்து, தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்கு அணிவித்து மகிழ்ந்தாராம்.
இன்றும், இந்த ஆபரணத்தை கருட சேவையின்போது வரதருக்கு அணிவிப்பார்கள் என்றும் கூறுவர்.
ஆங்கிலேய அதிகாரியான பிளேஸ் துரை என்பவர், ஸ்ரீவரதருக்கு தலையில் அணியும் தங்க ஆபரணத்தை அன்பளிப்பாகத் தந்து மகிழ்ந்தாராம்.
- வைகாசி - பிரம்மோற்சவம்; வசந்தோற்சவம்; ஸ்ரீநம்மாழ்வார் சாற்று முறை; ஸ்ரீநரசிம்ம ஜயந்தி
- ஆடி - திருவாடிப்பூர உற்சவம்; கஜேந்திர மோட்ச கருட சேவை; ஸ்ரீஆளவந்தார் சாற்று முறை,
சித்திரை - தமிழ் வருட பிறப்பு; திரு அவதார உற்சவம்; சித்ரா பௌர்ணமி, தோட்டோற்சவம்; ஸ்ரீராமநவமி; ஸ்ரீபாஷ்யகார சாற்று முறை; ஸ்ரீமதுரகவிகள் சாற்றுமுறை.
வைகாசி - பிரம்மோற்சவம்; வசந்தோற்சவம்; ஸ்ரீநம்மாழ்வார் சாற்று முறை; ஸ்ரீநரசிம்ம ஜயந்தி
ஆனி - கோடை உற்சவம்; கருட சேவை; ஸ்ரீபெரியாழ்வார் சாற்று முறை; ஸ்ரீவைனதேய ஜயந்தி; ஸ்ரீசுதர்சன ஜயந்தி; ஸ்ரீமந் நாதமுனிகள் சாற்று முறை; ஸ்ரீபேரருளாளன் ஜ்யேஷ்டாபிஷேகம்; ஸ்ரீபெருந்தேவியார் ஜ்யேஷ்டாபிஷேகம்
ஆடி - திருவாடிப்பூர உற்சவம்; கஜேந்திர மோட்ச கருட சேவை; ஸ்ரீஆளவந்தார் சாற்று முறை,
ஆவணி - ஸ்ரீஜயந்தி,
புரட்டாசி - ஸ்ரீதூப்புல் தேசிகன் மங்களாசாஸனம்; திருக்கோவில் தேசிகன் சாற்று முறை; நவராத்திரி; விஜயதசமி பார்வேட்டை,
ஐப்பசி - தீபாவளி; ஸ்ரீசேனைநாதன் சாற்றுமுறை; ஸ்ரீபொய்கை ஆழ்வார் சாற்று முறை; ஸ்ரீபூதத்தாழ்வார் சாற்று முறை; ஸ்ரீபேயாழ்வார் சாற்று முறை; ஸ்ரீமணவாள முனிகள் சாற்றுமுறை,
கார்த்திகை-கைசிக புராண படனம்; பரணி தீபம்; திருக்கார்த்திகை; ஸ்ரீதிருப்பாணாழ்வார் சாற்று முறை; ஸ்ரீலக்ஷ்மிகுமார தாததேசிகன் சாற்றுமுறை,
மார்கழி - ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் சாற்று முறை; திருவத்யயன உற்சவம்; பகல் பத்து-ராப்பத்து வைபவம்; அனுஷ்டான குள உற்சவம்; ஆண்டாள் நீராட்டு உற்சவம்; போகி திருக்கல்யாணம்.
தை - சங்கராந்தி; சீவரம் பார் வேட்டை; தெப்போற்சவம்; தைப்பூசம்; ஸ்ரீதிருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை; வனபோஜன உற்சவம்; ரதசப்தமி உற்சவம்;
மாசி - தவனோற்சவம்,
பங்குனி - திருக்கல்யாணம், பல்லவோற்சவம்.
- 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்ம பெருமாள் சந்நிதியை அடைகிறார்.
- காஞ்சி வரதராஜ பெருமாள், 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோவிலுக்கு செல்வார்.
பொங்கல் அன்று இரவு 10 மணிக்கு பார்வேட்டைக்குக் கிளம்பும் காஞ்சி வரதராஜ பெருமாள், 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோவிலுக்கு செல்வார்.
அங்கு 'வனபோஜனம்' விழா சிறப்பாக நடந்து முடிந்ததும், மறு நாள் பகல் 12 மணியளவில் வரதர், 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்ம பெருமாள் சந்நிதியை அடைகிறார்.
பிறகு, அங்கிருந்து ஸ்ரீவரதராஜ பெருமாளும், ஸ்ரீபுரம் நரசிம்மரும் 'திருமுக்கூடல்' எனும் இடத்தில் உள்ள ஸ்ரீ நிவாசபெருமாள் கோவிலுக்குப் புறப்படுவர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கருடசேவை
இங்கு, கருடசேவை வருடத்துக்கு மூன்று முறை அதாவது வைகாசி-விசாகம் (நம்மாழ்வார் திருநட்சத்திரம்)
பிரம்மோற்சவம், ஆனி-சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி-பௌர்ணமி கஜேந்திர மோட்சம்
ஆகிய வைபவங்களின்போது நடைபெறுகிறது.
முகம்மதியர் ஆதிக்கத்தின்போது காஞ்சி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் இருந்த உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பு கருதி, உடையார்பாளையம், ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பிற்காலத்தில் உடையார்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு உற்சவர் விக்கிரகங்களை எடுத்து வர, ஆத்தான் ஜீயர் என்ற பெரியவர், தோடர்மால் என்பவர் உதவினர்.
அவற்றில், எது காஞ்சி வரதர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, மூர்த்திகளின் திரு ஆடையை முகர்ந்து பார்த்த சலவைத் தொழிலாளி குங்குமப்பூ வாசனையை வைத்து காஞ்சி வரதரைக் கண்டுபிடித்தாராம்!
நவராத்திரி விழாவின்போது சலவைத் தொழிலாளி வம்சத்தவர்களுக்கு மாலை மரியாதைகள் அளிக்கப்படுகின்றன.
- அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர்.
- இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள்-சூரிய உதயத்தில் கோபுர வாயிலில் கருட வாகனத்தில், குடையின் கீழ் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீகாஞ்சி வரதர்.
அப்போது சில நிமிட நேரம் குடைகளால் ஸ்ரீவரதரை மறைத்து விடுவர்.
இதுவே தொட்டாச்சார்யர் சேவை எனப்படும்.
சோளிங்கபுரத்தில் வாழ்ந்தவர் தொட்டாச்சார்யர்.
இவர், ஆண்டுதோறும் வைகாசி உற்சவத்தின்போது கருட சேவையைக் காண காஞ்சிக்கு வருவது வழக்கம்.
ஒருமுறை அவரால் காஞ்சிக்கு வர இயலவில்லை.
சோளிங்கபுரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் நின்றவாறே வரதனின் கருட சேவையை நினைத்து நெக்குருகினார்.
அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர்.
இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
அதாவது பெருமாள் இங்கு மறைந்து அங்கு தோன்றுவதாக ஐதீகம்.