என் மலர்
நீங்கள் தேடியது "Kanjana 3"
பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, தற்போது ஆண்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். #Oviya #BiggBoss
நடிகை ஓவியா சினிமாவில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வந்த பிறகே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். ஓவியா நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் ரிலீசாக உள்ளது.
அதைத் தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் களவாணி 2 ரிலீசாக உள்ளது. அவ்வப்போது டுவிட்டரில் பல விஷயங்களைப் பகிரும் ஓவியா, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தைப் பகிர்ந்துள்ளார்.
பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக் கூடியவர்கள்.
அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தைத் தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்குச் சாப்பாடு தருவாள்.

நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பி தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால், அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்” என்பதை பகிர்ந்துள்ளார்.