என் மலர்
நீங்கள் தேடியது "kanna ravi"
- ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ‘ரத்தசாட்சி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.
தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' எனும் சிறுகதையை தழுவி 'ரத்தசாட்சி' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

ரத்தசாட்சி படக்குழு
'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் கண்ணா ரவி கூறியதாவது, இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயமோகன் சாரின் இந்தக்கதை அட்டகாசமானது. அதை இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படத்தை எடுக்க ஒப்புகொண்ட அல்லு அரவிந்த் சாருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும் என்றார்.

ரத்தசாட்சி படக்குழு
இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் கூறியதாவது, ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
- ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி உருவான படம் ‘ரத்தசாட்சி’.
- இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.
தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' எனும் சிறுகதையை தழுவி 'ரத்தசாட்சி' திரைப்படம் உருவானது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்தது. கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் 'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் கடந்த 9ம் தேதி வெளியானது.

ரத்தசாட்சி
இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடித்த கண்ணா ரவி, ஹரிஷ், இளங்கோ, மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- சென்னையில் பெரும்பாலான இடங்களில் மதுரை பையனுக்கு தமிழ் பொண்ணு வேணும் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
- தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மதுரை பையனுக்கு தமிழ் பொண்ணு வேணும் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இது எதற்கான விளம்பரமாக இருக்கும் என மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில் அதற்கான விடையை தற்பொழுது வெளியாகியுள்ளது.
இது ஆஹா ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடராகும். இத்தொடரின் பெயர் மதுரை பையனும் சென்னை பொண்ணும். இதில் தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் மற்றும் நடிகருமான சசிக்குமார் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இத்தொடரின் நடித்து இருப்பவர் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏஞ்சலின். சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களிலும் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது அதன் மூலம் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளாத்தை உருவாக்கினார்.
இத்தொடரை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார். சஞ்சய் தயாரித்துள்ளார். இத்தொடர் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏஞ்சலின் அழகாக புடவை அணிந்துக் கொண்டு இருக்கிறார். கண்ணா ரவி பழைய ஸ்கூட்டர் ஒன்றை தள்ளிக்கொண்டு வருகிறார். இவர்களுக்கு பின் கோவில் இடம் பெற்றுள்ளது. தொடரின் மற்ற விவரங்கள் நடிகர்கள், டீசர் மற்றும் டிரெய்லர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எம்மாதிரியான் காதல் கதையாக அமையவுள்ளது என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. ஏஞ்சலின் நடிப்பில் முதல் முறையாக வெளிவரும் தொடர் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.