என் மலர்
நீங்கள் தேடியது "Karachi Airport"
- பயணியின் நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
- கராச்சி விமான நிலையத்தில் பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
கராச்சி:
டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவரது நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. முன்னதாக அங்கு அந்த பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
விமானம் இறங்கியதும் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பயணியை சோதித்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையம்கீழ் கொண்டு வரப்பட்டன.
- தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
கராச்சி:
பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே திடீரென வெடிச்சத்தம் கேட்டது.
விமான நிலையத்திற்கு வெளியே டேங்கர் ஒன்று வெடித்ததாக போலீசாரும், மாகாண அரசாங்கமும் தெரிவித்தன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன.
ஆனால் சிந்து மாகாண உள்துறை மந்திரி ஜியா உல் ஹசன் உள்ளூர் தொலைக்காட்சியான ஜியோவிடம் கூறுகையில், இது வெளிநாட்டினர் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோவில் கார்கள் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்து அடர்த்தியான புகை எழுவதும் பதிவானது.
கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.