என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikal"

    கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, நீலகிரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். #TNRain #SchoolClose
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    இந்தநிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை  அளிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (6/10/2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    இதேபோல, நீலகிரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    காரைக்காலில் ஆய்வு பணிக்கு சென்ற அமைச்சர் கமலக்கண்ணன் மண்வெட்டி வாங்கி சாக்கடையை சுத்தம் செய்யத்தொடங்கினார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    மழைக்காலம் நெருங்குவதாலும், அண்டை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாலும், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் மந்தகரை முதல் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலான மெயின் சாலையில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்யவேண்டும் என அப்குதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனிடமும் மக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரனிடம் சாக்கடையை உடனே சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அப்பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இப்பணியில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், அம்பகரத்தூர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுமார் 35 பேர் ஈடுபட்டனர்.

    இப்பணியை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் கமலக்கண்ணன், திடீரென தானும் மண்வெட்டி வாங்கி சாக்கடையை சுத்தம் செய்யத்தொடங்கினார். சாக்கடை நீர் வேட்டியில் பட்டதால், வேட்டியை கழற்றிவிட்டு கால் சட்டையுடன் சாக்கடையில் இறங்கி நீண்ட நேரம் சுத்தம் செய்தார். இதை பார்த்த பொதுமக்களும் சாக்கடையை சுத்தம் செய்தனர். #MinisterKamalaKannan
    திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு கடை வீதியில் உள்ள தனியார் மதுபான கடையில், திருச்செந்தூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் (வயது34) வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என தனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் கூறி வந்தார்.

    இந்நிலையில் இரவு மதுபான கடையை மூடியப்பிறகு, கடையின் மாடியில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜபாண்டியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெடுங்காடு போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×