என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kari"

    • சசிகுமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காரி'.
    • இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியிருக்கும் காரி படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


    காரி

    இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குனர் ஹேமந்த் பேசியதாவது, "இந்த படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரை மேன் ஆப் தி ஆக்சன் என்று கூறினால், ஹீரோ சசிகுமாரை மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ் என்று சொல்வேன். படத்தின் கதையை கேட்ட சசிகுமார் நீங்க கதை சொன்ன மாதிரியே படமும் எடுத்துட்டா வெற்றிதான் என்று உற்சாகப்படுத்தினார்.


    காரி படக்குழு

    லோக்கல் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக நினைக்கவேண்டாம் லோக்கல் என்றால் நேட்டிவிட்டியை குறிக்கும். எவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மதிப்பு இருக்கும். ஆனால். இப்போது அந்த நேட்டிவிட்டியை தகர்க்கும் விதமாக தான் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கு தடை விதிக்க முயற்சிப்பது.


    காரி படக்குழு

    ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்றால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்கள் இன்னும் கலாச்சாரம் தொடர்பான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை திசை திருப்புவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு தடை போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த படத்தில் மனிதர்களின் நம்பிக்கை, உறவு சிக்கல்கள் ஆகியவற்றை கூறியுள்ளோம். மொத்தத்தில் இந்த படம் எமோசனல் ஆக்சன் டிராமாவாக இருக்கும்" என்றார்.

    ×